காணொளி: பெரு ஷாமன்களின் 2026 ஆம் ஆண்டுக்கான கணிப்பு என்ன?

காணொளிக் குறிப்பு, பெரு ஷாமன்கள் 2026 ஆம் ஆண்டிற்கான தங்களின் உலகளாவிய கணிப்புகளை வெளியிட்டனர்.
காணொளி: பெரு ஷாமன்களின் 2026 ஆம் ஆண்டுக்கான கணிப்பு என்ன?

பெரு ஷாமன்கள் 2026 ஆம் ஆண்டிற்கான தங்களின் உலகளாவிய கணிப்புகளை வெளியிட்டனர்.

அவர்கள் கடைபிடிக்கும் வருடாந்திர விழாவில் உலகத் தலைவர்களின் உருவப்படங்கள், மலர்கள், கோகோ இலைகள் மற்றும் வாள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு கடுமையான நோய் ஏற்படும் என்றும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஆட்சி வீழும் என்றும் கணித்திருந்தனர்.

யுக்ரேன் ரஷ்யா போரில் அவர்களில் கணிப்பு வேறுபட்டிருந்தது. சிலர் போர் முடிவுக்கு வரும் என்றும் சிலரோ தொடரும் என்றும் கணித்தனர்.

பெருவி ஷாமன்கள் புத்தாண்டுக்கு முன்பு பாரம்பரியமாக, மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் ஆயாஹுவாஸ்கா உட்பட கலவைகளை அருந்திய பிறகு, இந்தச் சடங்கை மேற்கொள்கின்றனர்.

அந்தக் குழுவின் கணிப்புகளின் துல்லியம் இதுவரை சீரற்றதாகவே இருந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு