காணொளி: நீச்சல் மற்றும் செஸ் இரண்டையும் ஒருங்கிணைக்கும் டைவிங் செஸ் சாம்பியன்ஷிப்

காணொளிக் குறிப்பு, நீச்சல் மற்றும் செஸ் இரண்டையும் ஒருங்கிணைக்கும் 2025 டைவிங் செஸ் உலக சாம்பியன்ஷிப்
காணொளி: நீச்சல் மற்றும் செஸ் இரண்டையும் ஒருங்கிணைக்கும் டைவிங் செஸ் சாம்பியன்ஷிப்

நீச்சல் மற்றும் செஸ் இரண்டையும் ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெற்ற இந்த போட்டியின் பெயர் 2025 டைவிங் செஸ் உலக சாம்பியன்ஷிப். இந்த போட்டியில் 40 பேர் பங்கேற்றனர்.

வீரர்கள், நீச்சல் குளத்தின் அடிப்பகுதி வரை நீந்திச் சென்று மூச்சைப் பிடித்துக்கொண்டு, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காந்த பலகைகளில் செஸ் விளையாட வேண்டும்.

இதில் ஆண்கள் பிரிவில் சியோன் கோலன் (Zyon Kollen) என்பவரும், பெண்கள் பிரிவில் 17 வயதான ஜோசபைன் டேமன் (Josephine Damen) என்பவரும் சாம்பியன்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு