கேரள வெள்ளம்: பாதிப்பின் கொடூரத்தைக் காட்டும் புகைப்படங்கள்

கேரள கனமழையால் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உண்டான நிலச்சரிவால் உயிர் மற்றும் பொருள் சேதங்கள் கணிசமாக நிகழ்ந்துள்ளன.

பட மூலாதாரம், @defencePROKochi

படக்குறிப்பு, கேரள கனமழையால் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உண்டான நிலச்சரிவால் உயிர் மற்றும் பொருள் சேதங்கள் கணிசமாக நிகழ்ந்துள்ளன.

எச்சரிக்கை: இப்பக்கத்தில் உள்ள சில படங்கள் உங்களுக்கு வருத்தத்தை உண்டாக்கலாம்.

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் உண்டான வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அந்த மாநிலத்தில் பரவலாக உயிர் மற்றும் பொருட் சேதங்கள் நிகழ்ந்துள்ளன.

பல வீடுகளும், சில இடங்களில் வீடுகளுக்குள் இருந்த மனிதர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

நிலச்சரிவால் கட்டடங்கள் இடிந்து அதில் புதைந்து மரணமடைந்த சில கோரமான நிகழ்வுகளும் கேரளாவில் நடந்துள்ளது.

கேரள மாநில அரசு ஊழியர்களுடன், தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய ராணுவம், இந்திய கடற்படை, இந்திய விமானப் படை உள்ளிட்ட மத்திய அரசு முகமைகளின் ஊழியர்களும் தேடுதல் மற்றும் மீட்புதவிப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

கேரளாவில் உண்டாகியுள்ள வெள்ள பாதிப்பைக் காட்டும் சில படங்கள்.

தொடுப்புழாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த ஒருவரின் உடல் மீட்புப் பணியாளர்களால் கொண்டு செல்லப்படுகிறது.

பட மூலாதாரம், APPU S. NARAYANAN / AFP via getty inages

படக்குறிப்பு, தொடுப்புழாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த ஒருவரின் உடல் மீட்புப் பணியாளர்களால் கொண்டு செல்லப்படுகிறது.
ஐ.என்.எஸ் கருடா என்ற இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம் கூட்டிக்கல் எனும் இடத்தில் உள்ள வெள்ள பாதிப்பை காட்டுகிறது.

பட மூலாதாரம், @DefencePROKochi

படக்குறிப்பு, ஐ.என்.எஸ் கருடா என்ற இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம் கூட்டிக்கல் எனும் இடத்தில் உள்ள வெள்ள பாதிப்பை காட்டுகிறது.
kerala floods 2021

பட மூலாதாரம், APPU S. NARAYANAN /AFP via Getty Images

படக்குறிப்பு, தொடுப்புழாவில் இடிந்து போன வீடு இருக்கும் இடத்தில் இருந்து நாயை மீட்டுச் செல்கிறார் ஒருவர்.
தாழ்வாகப் பறக்கும் ஐ.என்.எஸ் விமானம்; சாலையோரம் கூடியுள்ள மக்கள்.

பட மூலாதாரம், @DefencePROKochi

படக்குறிப்பு, தாழ்வாகப் பறக்கும் ஐ.என்.எஸ் விமானம்; சாலையோரம் கூடியுள்ள மக்கள்.
#KeralaRains

பட மூலாதாரம், Ndrf

படக்குறிப்பு, இடுக்கி மாவட்டம் கொக்கையாறு எனும் இடத்தில் நிலச்சரிவுக்குப் பின் மீட்பு பணியில் ஈடுபடும் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர்.
இடுக்கி மாவட்டம் கொக்கையாறு எனுமிடத்தில் வெள்ளத்தால் கவிழ்ந்த வாகனத்தை திருப்பும் மீட்புப் பணியாளர்கள்.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, கேரளாவில் அடிக்கடி உண்டாகும் வெள்ளத்தால் இந்த வாகனத்தைப் போலவே பல மக்களின் வாழ்வும் புரட்டிப் போடப்படுகிறது. இடுக்கி மாவட்டம் கொக்கையாறு எனுமிடத்தில் வெள்ளத்தால் கவிழ்ந்த வாகனத்தை திருப்பும் மீட்புப் பணியாளர்கள்.
கோட்டயம் மாவட்டத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட். kerala rain news

பட மூலாதாரம், @DefencePROTvm

படக்குறிப்பு, கோட்டயம் மாவட்டத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட்.
தேசிய பேரிடர் மேலாண்மை படை, கேரள அரசு அலுவலர்கள், இந்திய பாதுகாப்பு படைகளைச் சேர்ந்தவர்கள், தன்னார்வலர்கள் என அனைவருமே கடந்த சில நாட்களாக இரவு - பகல் பாராது உழைத்தும் உதவியும் வருகிறார்கள்.

பட மூலாதாரம், @DefencePROKochi

படக்குறிப்பு, தேசிய பேரிடர் மேலாண்மை படை, கேரள அரசு அலுவலர்கள், இந்திய பாதுகாப்பு படைகளைச் சேர்ந்தவர்கள், தன்னார்வலர்கள் என அனைவருமே கடந்த சில நாட்களாக இரவு - பகல் பாராது உழைத்தும் உதவியும் வருகிறார்கள்.
#KeralaFlood2021

பட மூலாதாரம், @DefencePROTvm

படக்குறிப்பு, மீட்பு நடவடிக்கைகளின்போது தங்க நகைகள், பணம் போன்றவையும் கிடைத்தால், மீட்புப் பணியாளர்களால் அவை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
kerala rain news

பட மூலாதாரம், Ani

படக்குறிப்பு, சில இடங்களில் வெயில் தலை காட்டத் தொடங்கினாலும், வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. கோட்டயம் நகரில் உள்ள ஒரு சாலை இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :