கொரோனா வைரஸ்: கேரளாவில் முழுமையாக கட்டுக்குள் வந்துவிட்டதா? - இந்திய நிலவரம்

பட மூலாதாரம், Getty Images
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1211 ஆக உள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
எனவே இந்தியாவில் மொத்தமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 339 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
மும்பையின் தாராவியில் புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தாராவியில் மட்டும் இருவர் உயிரிழந்துள்ளனர் என்பதை பிரிஹன் மும்பை நகராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் தாராவியில் டுரோன்கள் மூலமாகவும் சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
மகாராஷ்டிராவின் நாக்பூரில் புதிதாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

நடமாடும் பேருந்து மருத்துவமனைகள்
- ஹரியானாவில் உள்ள 15 மாநகராட்சி பேருந்துகள் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான நடமாடும் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் அங்கு 15 மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 11 மருத்துவக் குழுக்கள் கிராமப்புற பகுதிகளுக்குச் சென்று சிகிச்சை அளிப்பார்கள் என்று ஹரியானாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- குஜராத்தில் புதிதாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை குஜராத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. 55 பேர் குணமடைந்துள்ளனர்.
- இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள அசாத்பூர் மண்டியில் காய்கள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக ஒற்றை எண் கொண்ட கடைகள் ஒரு நாள் இயங்க வேண்டும் இரட்டை எண் கொண்ட கடைகள் மற்றொரு நாள் இயங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் புதிதாக 48 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 945 ஆக அதிகரித்துள்ளது.
- ஜம்முவில் உள்ள பாதிந்தி பகுதிக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எல்லாம் சரியாகிவிட்டது என்ற முடிவுக்கு வரவேண்டாம்
''நீடிக்கப்பட்ட முடக்கநிலையை அமல்படுத்தக் கேரளாவில் சில செயல் திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. கேரளாவைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் எல்லாம் சரியாகி விட்டது எனக் கூற முடியாது. எனவே கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டியது அவசியம்'' என்கிறார் கேரள சுகாதார துறை அமைச்சர் ஷைலஜா .
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








