"குஜராத் படுகொலை: வாஜ்பேயி நடுநிலை தவறி நரேந்திர மோதியை ஆதரித்தது ஏன்?"

வாஜ்பேயி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வாஜ்பேயி
    • எழுதியவர், மணிசங்கர் அய்யர்
    • பதவி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)

அடல் பிஹாரி வாஜ்பேயி மறைவிற்குப்பின் ஓடிய கண்ணீர் பெருங்கடலில், நானும் என் பங்கினை வழங்கினேன், ஓர் மனிதன் மற்றும் ஓர் அரசியல்வாதி குறித்து நமது மதிப்பிடலில் குறிப்பிட்ட சமன்பாட்டை நாம் இழந்துள்ளதாக தெரிகிறது. ஒருவேளை துக்கம் கடைபிடிக்கப்படும் இந்த தருணத்தில் இது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் கண்ணோட்டத்தை இழக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆமாம், வாஜ்பேயி, பல வகையிலும் முற்போக்கானவர், மதசார்பற்றவர், சமத்துவ ஜனநாயகவாதி மற்றும் மாபெரும் நாடாளுமன்றவாதி. இருப்பினும், அவரால் அவரது அடிப்படை வேரான ஆர்.எஸ்.எஸ். என்னும் காந்த சக்தியை விட்டு ஒருபோதும் விலக முடியவில்லை. ஜவஹர்லால் நேருவிடம் இருந்து அவர் பெற்ற விழுமியங்கள் மற்றும் ஆழமாக பதிந்துவிட்ட ஆர்.எஸ்.எஸ். தொடர்புக்கும் இடையே அதிகமான பதட்டம் வளர்ந்த பிறகு, அவரது ஆர்.எஸ்.எஸ். தொடர்பு வெற்றி பெற்றது.

இதன் படுமோசமான உதாரணமாக, 2002 பிப்ரவரி-மார்ச் மாதம் குஜராத்தில் முஸ்லிம்கள் படுகொலை நடைபெற்றபோது வெளிப்பட்டது.

இந்த படுகொலைகளை மாநில அரசு கண்டும் காணாமலும் விட்டாலும் அல்லது இந்த வன்முறைக்கு துணை போய், கலவரம், கற்பழிப்பு மற்றும் கொடூரத்தையும் என குறிவைத்து நடத்தப்பட்ட படுகொலைகளை கூட்டாக செய்தது. வாஜ்பேயி மலைத்துப் போனார். முதலமைச்சர் நரேந்திர மோதி அரசாங்கத்தின் தலைவராக நடவடிக்கையில் இறங்குவார் என்று ஒரு மாதகாலம் அவர் காத்திருந்தார்.

சபர்மதி ரயில் எரிப்பு சம்பவம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சபர்மதி ரயில் எரிப்பு சம்பவம்

இந்திய அரசமைப்பு சாசனத்தின்படி, ஒவ்வொரு இந்தியனும் சமமான முறையில் நடத்தப்படவேண்டும் என்ற நிலையிலும், மோதி இதனை செய்வதற்கு தவறியபோது, வாஜ்பேயி அகமதாபாத் பறந்து சென்றார்.

இது தொடர்பான பல கதைகள் சொல்லப்பட்டன. சமீபத்தில் தொலைக்காட்சிப்பேட்டியில் அவரது முக்கிய ஆலோசகர்களில் ஒருவரான அருண் ஷோரியும் குறிப்பிட்டு இருந்தார். அவரது அரசியல் குழுவின் பல்வேறு பிரிவினர் மூலம் பெற்ற ஆலோசனைகளுக்கு முரண்பாடாக இந்த விமான பயணம் நடந்தது.

வாஜ்பேயிக்கு நெருக்கமாக இருந்த அரசியல் தலைவர்களின் வாயிலாக, மோதிக்கு வலுவான ஆதரவு வழங்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதித்தது ஆர். எஸ்.எஸ். பா.ஜ.க. பிரதமர் ஒருவர் பா.ஜ.க. முதல்வர் ஒருவருக்கு ஆதரவாக செயல்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. இந்த ஆலோசனைகளுக்கு எதிராக வாஜ்பேயியின் ஆழமான நம்பிக்கை இருந்தது. மிகப்பெரிய தவறு நிகழ்ந்துள்ளது. தவறிழைத்தவர்கள் தோலுரிக்கப்பட வேண்டும் என்பதே அது.

மணிசங்கர் அய்யர்

பட மூலாதாரம், The India Today Group

படக்குறிப்பு, மணிசங்கர் அய்யர்

அகமதாபாத் வந்து இறங்கியதும், வாஜ்பேயி, ஷா ஆலம் மசூதியில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாமிற்கு முதலமைச்சர் மோதி ஒருமுறை கூட வரவில்லை என்று கண்டறிந்தார். இந்த முகாமில் உயிருக்கு பயந்து ஓடி நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் குவிந்திருந்தனர். இவர்களின் துயர் துடைக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான நடவடிக்கை உள்பட எந்த ஒரு செயலிலும் மோதி ஈடுபடவில்லை. அவரது மோசமான பயம் உறுதியானது.

கடந்த சில நாட்களாகவே தொலைக்காட்சி அலைவரிசைகள், தொடர்ந்து வாஜ்பேயியின் செய்தியாளர் சந்திப்பை ஒளிபரப்பி வந்தன. அதில் மோதி தனது ராஜ தர்மத்தை செயல்படுத்த வேண்டும் என்று வாஜ்பேயி கண்டித்தார்.

பிரதமருக்கு அடுத்தபடியாக அமர்ந்து இருந்தவரை, பதட்டமான, குறுகிய முதலமைச்சரின் முகத்தை தன் நாற்காலியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற துடித்துக்கொண்டிருந்தவரைக் காண முடிந்தது. உண்மையில் அவர் அனைவருக்கும் சாதி மத வேறுபாடின்றி சமத்துவமான முறையில் நடத்துவதாக அவர் முணுமுணுத்தார். வாஜ்பேயியும் தனக்கே உரித்தான கேலியுடன், முதலமைச்சர் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார் என்றார்.

அதன் பின்னர்தான் இந்தியாவின் எந்த ஒரு பிரதமரும் செய்யாத வகையில் வெட்கக்கேடான வகையில் தன் நிலையில் இருந்து மாறினார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிற பா.ஜ.க தலைவர்கள் (குறிப்பாக அத்வானி மற்றும் ஜேட்லி, இருவரும் மோதியின் ஆதரவு காரணமாக குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆனவர்கள்) கொடுத்த நெருக்கடிக்கு பலியாகி பச்சோந்தியாக மாறினார்.

கடந்த பல தசாப்தங்களாக அவர் வெற்றிகரமாக பதவியில் ஒட்டிக்கொண்டிருந்த அதே உத்தியை கடைபிடித்தார். தொடர்ந்து கோவாவில் நடைபெற்ற மாபெரும் பா.ஜ.க. மாநாட்டில் மோதியை புகழ்ந்து தள்ளினார்.

வாஜ்பேயி

பட மூலாதாரம், Hindustan Times

மோதியை அவர் குற்றமற்றவராக அறிவித்த காரணத்தால் மோதி கட்சியையும், மத்திய அரசையும் கைப்பற்ற முடிந்தது. இதனை நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டு இருந்த வாஜ்பேயிக்கு உணர வாய்ப்பு இல்லை.

அவர் அவ்வளவு ஒன்றும் நோய்வாய்ப்படவில்லை. அவர் நினைவுகள் முற்றிலும் அகன்றுவிட்டது. அப்படி இல்லாவிட்டால் மோதி கடந்த நான்கு கவலைக்குரிய வருடங்களில் இந்த நாட்டை நடத்திய விதத்தை அவர் கண்டித்திருப்பார் என்று நான் உறுதியாக கூறுகிறேன். தனது ஆர்.எஸ்.எஸ். பின்னணியையும் தாண்டி அவர் மறுத்திருப்பார்.

முன்பும், வாஜ்பேயி ரத யாத்திரை என்ற மதவாத பெருந்துன்பம் மற்றும் பாபர் மசூதி இடிப்பின் போதும் அவர் பல்டி அடித்துள்ளார். அத்வானியின் ரதயாத்திரையின் போது அவர் வெளிப்படையாக ஒதுங்கிக்கொண்டார்.

அதனால் இந்த அக்னி ரதம் கடந்து வந்த ரத்தப் பாதையில் அவரது மதசார்பின்மை தப்பியது. ஆனால் கர சேவக குண்டர்கள் அயோத்தியை அடைந்த போது அவரால் தன் கொள்கைகளை கட்டிக்காக்க முடியவில்லை, விரும்பவில்லை. அவர் 1992 டிசம்பர் 5ம் தேதி அவர்களிடையே உரை நிகழ்த்தினார். அந்த நினைவில் வைத்திருக்க வேண்டிய, இழிவான உரை கடந்த சில நாட்களாக தொலைக்காட்சிகளின் நினைவூட்டல்களாக திரும்பத்திரும்ப ஒளிபரப்பப்பட்டு வந்தன. அவர் கர சேவகர்களின் விசுவாசத்தை கைப்பற்ற அந்த இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

பாபர் மசூதி

பட மூலாதாரம், Getty Images

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் பாபர் மசூதியை பெருக்கி சுத்தம் செய்யும் பணியை மட்டும் செய்வார்கள் என்று அவர் வாதிட்டார்.

ஆனால் அவருக்கு நன்றாக தெரியும், கர சேவகர்களின் பிரபலமான கோஷங்களில் ஒன்று, "இன்னொருமுறை தள்ளு, பாபர் மசூதி இடிந்து விழும்" என்பது. அவர் தன் பேச்சைக் கேட்க வந்தவர்களிடம், பாபர் மசூதியை தொடக்கூடாது என்று கரசேவகர்களை கடுமையாக எச்சரித்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனம் எடுத்துக் கொண்டார். செய்யாமல் விட்ட பாவம், கரசேகவர்கள் மத்தியில் அவர் பேசிய பாவத்தை விட பெரியது. மறுநாள், அவர் உரையைக் கேட்டவர்கள், மசூதியின் மீது ஏறினார்கள். வாஜ்பேயி அமைதியை கடைபிடித்த போதும் (அவர் நண்பர் பிரதமர் நரசிம்ம ராவ் செய்தது போன்றே) கர சேவகர்கள் ஒன்றன் பின் ஒன்றாக மசூதியின் கோபுரங்களை இடித்துத் தள்ளினார்கள்.

1992 டிசம்பர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, கருப்பு ஞாயிற்றுக்கிழமையாக சுதந்திர இந்தியாவின் மிகவும் மோசமான நாளாக அமைந்தது.

1977ல், அவர் ஆர்.எஸ்.எஸ். பயிற்சியை நிறைவு செய்தார். நேருவுடன் பெற்ற பயிற்சியின் படி அவர் ஜன சங்கத்தை கலைத்து, ஜனதா கட்சியுடன் இணைத்தார். ஆனால், ஜனதா கட்சி மற்றும் ஆர். எஸ்.எஸ். ஆகிய இரண்டின் உறுப்பினராக இருப்பது குறித்து கேள்வி எழுந்து படகு ஆட்டம் கண்ட அடுத்த நிமிடம் மொரார்ஜி தேசாயின் அரசு வீழ்ந்தது. வாஜ்பேயி தன் ஆதரவாளர்களை ஜனதா கட்சியுடன் வைத்திருக்க முயற்சித்தார், ஆனால் அரசு விழுந்ததும், அவரும் விழுந்தார்.

ஆனால், வேண்டா வெறுப்பாக, அத்வானி தொலைக்காட்சியில் சொன்னது போல், ஜனதா கட்சியை உடைய விட்டு விட்டு, புதிதாக பாரதீய ஜனதா கட்சி தொடங்கப்பட காரணமாக இருந்தார். காந்திய சோஷலிசத்தை பாஜக மூலம் கொண்டுவருவதாக கூறி தனது இழந்த பெருமையை மீட்டெடுக்க முயற்சித்தார். ஆனால் புதிய கட்சி தன் கொள்கைகளில் இருந்து தடம் புரண்ட போதும் அவர் அதனுடன் இருந்தார்.

எல்லா மனிதர்களும் பழுதானவர்கள்தான். அதில் வாஜ்பேயி விதிவிலக்கு இல்லை.

அவரது குறிப்பிடத்தக்க சாதனைகளை இந்த மருக்களை திசைதிருப்பவில்லை. அவை இல்லாவிட்டால் வரலாறு திரிந்து திருத்தொண்டர் வரலாறாக ஆகியிருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: