“வாஜ்பேயி காலில் விழுந்ததும் என் கை, கால்கள் நடுங்கின” - மதுரை சின்னப்பிள்ளை

சின்னப்பிள்ளை

என்னுடைய புகழ் பரவ அடல் பிஹாரி வாஜ்பேயி எனது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற நெகிழ்ச்சியான சம்பவமே காரணம் என மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளை கூறியுள்ளார்.

வாஜ்பேயி இந்திய பிரதமராக இருந்தபோது, கிராம மக்களிடையே களஞ்சியம் என்ற பெயரில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் நடத்தி, சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்து பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தியதற்காக "ஸ்திரீ சக்தி" எனும் விருது பெற்றவர்தான் சின்னப்பிள்ளை என்ற மூதாட்டி.

டெல்லியில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் எதிர்பாராத விதத்தில் தன்னைவிட இளையவரான சின்னப்பிள்ளையின் காலைத் தொட்டு வணங்கினார் வாஜ்பேயி.

மதுரை சின்னப்பிள்ளை

பட மூலாதாரம், Twitter

தற்போது வாய்பேயி மறைந்தவுடன், இந்த நிகழ்வு பற்றி நினைவுகளை சின்னப்பிள்ளை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

"களஞ்சியம் என்ற பெயரில் சுய உதவி குழுக்களை உருவாக்கி பணிபுரிந்த எனக்கு, பேரையும் புகழையும் வாங்கி கொடுத்தவர் வாய்பேயி. எனக்கு உடல் நலமில்லாததால் என்னால் டெல்லிக்கு நேரில் சென்று அஞ்சலி செல்லுத்த முடியாமல் போனது வருத்தமாக உள்ளது" என்று சின்னப்பிள்ளை கூறினார்.

சின்னப்பிள்ளை

வாய்பேயி புகைப்படத்தை வைத்து அவரது மறைவுக்கு தமது பகுதியில் அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.

"வாயிபேயி மற்றும் அண்மையில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி இருவருமே எனக்கு விருது கொடுத்துள்ளனர். இவர்கள் இருவருமே சொர்க்கம் செல்ல வேண்டுமென்று கடவுளை பிரார்த்திக்கிறேன்" என்று சின்னப்பிள்ளை கூறினார்.

அடல் பிஹாரி வாஜ்பேயி

14 மாநிலங்களில் களஞ்சியம்

கடன் சுமையாலும், குடிப் பழக்கத்தாலும் மிகவும் துயரமடைந்த ஏழை மக்களை களஞ்சியத்தில் இருந்து வந்த சுமதியும், உமா ராணியும் சேமிக்க சென்னார்கள்.

சேமித்தவர்களை பார்த்தால், வீடு, மனை என வாங்கி, பிள்ளைகுட்டிகளோடு வளர்ந்து விட்டனர். இன்று இந்த நிறுவனம் 14 மாநிலங்களில் பரவி நிலை கொண்டுள்ளது.

பிரதமர் வாய்பேயி கொடுத்த பேரும், புகழாலும்தான் இத்தகைய வளர்ச்சி எனக்கு கிடைத்தது. எங்களுக்கு நல்ல மரியாதையும் கிடைத்தது,

இந்த 14 மாநிலங்களிலும் சென்று பணிகளை ஒருங்கிணைத்துள்ளேன்.

மனதை நெகிழ வைத்த சம்பவம்

அடல் பிஹாரி வாஜ்பேயி

பட மூலாதாரம், Getty Images

அப்போதைய பிரதமர் வாய்பேயி காலில் விழுந்து வணங்கியபோது அவரது மனநிலை எப்படி இருந்தது என்று கேட்டபோது,"அவர் என் காலில் திடீரென விழுந்தவுடன் ரெம்ப கவலையாக இருந்தது. நமது நாட்டின் தலைவர் எனது காலில் விழுந்துவிட்டாரே என்று கை, கால் எல்லாம் ஆட்டம் காண தொடங்கியது.

சின்னப்பிள்ளை

சரியான கூட்டம். பயங்கரமாக கைத்தட்டினாங்க. அப்போது பக்கத்தில் இருந்த தமிழ் தெரிந்த ஒருவர், அம்மா! நீங்க பள்ளிக்கூடம் படிக்காம, படிப்பறிவு இல்லாம மக்களுக்காக சேவை செஞ்சு, ஏழை மக்களுக்காக பாடுபட்டீங்க. அதனால உங்களை ஒரு தெய்வமாக பார்த்து உங்கள் காலில் விழுந்து வணங்கியுள்ளார். கவலைபடாதேம்மா என பேசினார்" என்று சின்னப்பிள்ளை நினைவுக்கூர்ந்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

"இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தால் எனது பேரும் புகழும் உலகம் முழுவதும் பரவியது. இப்படிப்பட்ட ஒருவர் நமது நாட்டின் தலைவராக நமக்கு கிடைக்கமாட்டாரு. அவர் மேலோகத்தை, சொர்க்கத்தை அடைய வேண்டும் என்று வேண்டிகொள்கிறேன்" என்றார் சின்னப்பிள்ளை.

வாஜ்பேயி: இந்துத்துவ பாஜக-வின் மிதவாத முகம்

காணொளிக் குறிப்பு, வாஜ்பேயி: இந்துத்துவ பாஜகவின் மிதவாத முகம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :