ரோஹிஞ்சா மக்களை நாடு கடத்த திட்டம்: மோதியின் மியான்மர் பயணம் - என்ன தொடர்பு?

Rohingya refugees from Rakhine state in Myanmar walk along a path near Teknaf in Bangladesh on September 3, 2017.

பட மூலாதாரம், AFP

    • எழுதியவர், சுபிர் பௌமிக்
    • பதவி, கொல்கத்தா பத்திரிகையாளர்

இந்தியாவில் வாழும் ரோஹிஞ்சா மக்களை நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாக இந்தியா அறிவித்திருப்பது, பிரதமர் நரேந்திர மோதி பெளத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் மியான்மரில் பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், அந்நாட்டு மக்களை திருப்பதிப்படுத்தும் ஒரு முயற்சியாகும் என்று யாங்கூனிலுள்ள சுபிர் பௌமிக் தெரிவிக்கிறார்.

ஆகஸ்ட் 25-ஆம் தேதி ரோஹிஞ்சா ஆயுதப்படையினர் மியான்மரின் ரக்கைன் மாநிலத்திலுள்ள காவல் நிலைகளை தாக்கியதில், பாதுகாப்பு படையை சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டனர்.

இதன் காரணமாக தொடங்கிய ராணுவ ஒடுக்குமுறை நடவடிக்கை ரோஹிஞ்சா அகதிகள் நெருக்கடியை தொடர்கின்ற பிரச்சனையாக்க உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் வாழுகின்ற சுமார் 40 ஆயிரம் ரோஹிஞ்சா மக்கள் அனைவரையும், இந்தியா நாடுகடத்தும் என்று இந்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜி அறிவித்திருக்கிறார்.

ஐக்கிய நாடுகள் அவையால் அகதிகளாக பதிவு செய்யப்பட்டுள்ள 16 ஆயிரம் ரோஹிஞ்சா மக்களும் இந்த 40 ஆயிரம் பேரில் உள்ளடங்குகின்றனர்.

"ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகள் நிறுவனத்தில் பதிவு செய்திருப்பதால் எந்த பயனும் இல்லை. எங்களை பொறுத்தமட்டில் அனைவரும் சட்டப்பூர்வமற்ற குடியேறிகளே" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெற்ற காவல் நிலைகள் மீதான தாக்குதலுக்கு பிறகு, மியான்மரின் பயங்கரவாத தடுப்புக்கு எதிரான முயற்சிகளுக்கு உறுதியாக ஆதரவளிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

மியான்மார் : ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்குமா?

காணொளிக் குறிப்பு, மியான்மார் : ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்குமா?

செப்டம்பர் 5 ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோதி மியான்மரில் பயணம் மேற்கொள்ளுவதற்கு உகந்த சூழ்நிலையை அமைத்து கொடுக்கவே இந்தியாவின் இந்த இரண்டு அறிக்கைகளும் விடப்பட்டுள்ளன.

மியான்மரில் ராணுவ நடவடிக்கை தொடங்கியதில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் அருகிலுள்ள வங்கதேசத்திற்கு தப்பியோடியுள்ளனர்.

இந்த நெருக்கடியில், சீனா அமைதி காத்து வருவது, இந்தியா எடுத்துள்ள இந்த உறுதியான நிலைப்பாடு, மியான்மர் மக்களின் முக்கிய நீரோட்ட பொது கருத்தில் உறுதியான பாதிப்பை ஏற்படுத்த உதவியிருக்கிறது.

இந்தியா ரோஹிஞ்சா மக்களை நாடு கடத்தி மியான்மருக்கு அல்லது வங்கதேசத்திற்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறதா? அல்லது உண்மையிலே இது நடைபெறுமா? என்பதெல்லாம் தெளிவாக தெரியவில்லை.

ரோஹிஞ்சா இன மக்கள் நாடில்லாத மக்களாவர். அவர்களுக்கு குடிமக்கள் உரிமையை வழங்க மியான்மர் மறுத்து வருகிறது. வங்கதேசம் ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான ரோஹிஞ்சா அகதிகளின் தாயகமாக விளங்குகிறது.

ஆனால், இந்தியா வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகள் மியான்மரிலுள்ள கடும்போக்கு தேசியவாதிகளோடு தொடர்பு ஏற்படுத்தும் வகையில் வழங்கப்பட்டதாகும் என்பது தெளிவாக தெரிகிறது

ரோஹிஞ்சா மக்களை நாடு கடத்துவதற்கு திட்டமிடும் அரசின் நடவடிக்கை தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்திய அரசு திங்கள்கிழமை இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் சுமார் 40 ஆயிரம் ரோஹிஞ்சாக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, இந்தியாவில் சுமார் 40 ஆயிரம் ரோஹிஞ்சா மக்கள் வாழ்ந்து வருகின்றனர்

"இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அவர் சேர்ந்துள்ள பாரதிய ஜனதா கட்சியும் முஸ்லிம்கள் என்று வந்துவிட்டால், தங்களுடைய சிந்தனைக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாக மியான்மரிலுள்ள தேசியவாதிகளும். பௌத்த கடும்போக்குவாதிகளும் பார்க்கின்றனர்" என்று இந்தியாவிலுள்ள மணிப்பூர் பல்கலைக்கழகத்தின் மியான்மர் ஆய்வு மையத்திற்கு தலைமை தாங்குகின்ற ஜிடென் நொங்தாவ்பாம் பிபிசியிடம் கூறியுள்ளார்.

சிறப்பு நடவடிக்கைகளில், மியான்மரின் படையினருக்கு பயிற்சியளிக்கின்ற இந்தியாவின் திட்டங்களை, ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான மியான்மரின் நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவளிக்கின்ற செயல்பாடுகளாக சிலர் கருதுகின்றனர்.

மியான்மரின் படை அதிகாரிகளோடு நல்ல உறவுகளை இந்தியா தீவிரமாக பேணிவருகிறது. இத்தகைய நல்லுறவின் மூலம் மியான்மரின் நகாயிங் காடுகளை தலைமையிடமாக கொண்டு இந்தியாவின் வட கிழக்கில் செயல்பட்டு வருகின்ற பெரும்பான்மையான ஆயதப்படையினருக்கு எதிராக செயல்பட, இந்த அதிகாரிகளின் உதவியை பெறலாம் என்று இந்தியா கருதுகிறது..

மேலதிக நல்லுறவை காட்டுகின்ற அடையாளமாக, மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் ஒரு துறைமுகத்தையும், சித்டுவேயில் நீர்வழி திட்டத்தையும் இந்தியா கட்டியமைத்து வருகிறது. சித்டுவேயையும், இந்தியாவின் மிசோரம் மாநிலத்திலுள்ள ஸிரின்புரியையும் சாலை வழியாக இணைக்கும் பணிகளும் கூடிய சீக்கிரம் தொடங்கவுள்ளன.

தொடரும் நெருக்கடியில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள்

காணொளிக் குறிப்பு, தொடரும் நெருக்கடியில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள்

இந்தப் பணித்திட்டம் இந்தியாவின் பெருநிலப்பகுதியை அதனுடைய வட கிழக்கு பகுதியோடு இணைக்க உதவுகிறது. ஆனால், அந்தப் பணித்திட்டத்தை நாம் மியான்மருக்கு வழங்கியுள்ளோம்.

"சில நாடுகள் செயல்படுவதைபோல் அல்லாமல், இந்தியாவின் வர்த்தகங்களுக்கு உதவுகின்ற வணிக ரீதியிலான வசதிகளை உருவாக்காமல், மியான்மருக்கு பொது சொத்துக்களை உருவாக்குகின்ற நோக்கத்தில் இந்தியா செயல்பட்டு வருகிறது" என்று சீனாவை தெளிவாக குறிப்புணர்த்தும் வகையில், மியான்மருக்கான இந்தியாவின் தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருக்கிறார்.

இந்தியா, தன்னுடைய "கிழக்கு செயல்பாடு" கொள்கையை வெற்றிகரமானதாக்கும் அதிக உள்கட்டுமான திட்ட்டங்களை தீவிரமாக எதிர்பார்ப்பதாக 2014 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அறிவித்தார்.

இந்த கொள்கையின்படி, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தியா தன்னுடைய செல்வாக்கை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் அதிகரிக்கும் ஆதிக்கத்தை தடுப்பதன் மூலம்? தன்னுடைய வட கிழக்கு எல்லைகளில் பாதுகாப்பையும் கொண்டு வர இந்தியா திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

நாடு கடத்தப்பட்டால், இந்தியாவில் வாழ்கின்ற ரோஹிஞ்சா மக்கள் எங்கு செல்வர் என்பது தெரியவில்லை

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, நாடு கடத்தப்பட்டால், இந்தியாவில் வாழ்கின்ற ரோஹிஞ்சா மக்கள் எங்கு செல்வர் என்பது தெரியவில்லை

மியான்மரில் மேற்கொள்ளும் பயணத்தின்போது, இந்தியாவின் உதவியோடு பகானில் மீட்கப்பட்டுள்ள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட முற்கால பகோடா, யங்கூனின் அடையாள முக்கியத்துவம் வாய்ந்த ஷிவிடாகோன் பகோடாவை சந்திப்பதோடு, அங்குள்ள உள்ளூர் அரங்கம் ஒன்றில் நடைபெறும் பொது பேரணியிலும் மேதி கலந்து கொள்கிறார்

மியான்மரில் குடியேறியுள்ள இந்தியர்களை, மத முறையீடு மற்றும் அரசியல் சுவை கலந்த ஒரு கலவையின் மூலம் மியன்மாரிலுள்ள தேசியவாதிகளோடு தெடர்புப்படுத்தும் வகையில் இந்தப் பயண நிகழ்ச்சிநிரல் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

பிற செய்திகள்

"ரோஹிஞ்சா மக்களை நாடுகடத்தப்போவதாக வாக்குறுதி அளித்தபோது, மோதிக்கும். ரிஜ்ஜி விடுத்த இந்த முதல் அறிக்கைக்கும் தற்செயலான எந்த தொடர்பும் இல்லாமலும் இருக்கலாம். அமைச்சர் ரிஜ்ஜூ பௌத்தர். இந்தியாவின் சர்ச்சைக்குரிய அருணாசல பிரதேசத்தை திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமா சந்தித்தபோது, ரிஜ்ஜியும் உடன் சென்றார்" என்று மியான்மர் விவகாரங்களை உற்று கவனித்து வருகின்ற பிநோடா மிஷ்ரா பிபிசியிடம் கூறியிருக்கிறார்.

"ரோஹிஞ்சாக்களை உண்மையிலேயே நாடு கடத்துவது தொடங்கப்படாமல் போகலாம். ரோஹிஞ்சாக்களை திருப்பி அனுப்புவது என்பதை இறுதி செய்து முடிவெடுப்பது என்பது எளிதான காரியமல்ல. ஆனால், மியான்மரில் மோதி பயணம் மேற்கொள்ளும் நிலையில் அரசியல் அதிர்வுகளை உருவாக்க இந்த அறிவிப்புகள் உதவியிருக்கின்றன" என்று இந்தியாவிலுள்ள ரோஹிஞ்சாக்களை பற்றி ஆய்வு செய்கின்ற அனிதா சென்குப்தா குறிப்பிடுகிறார்.

சென்னையில் ரோஹிஞ்சா அகதிகள்

காணொளிக் குறிப்பு, சென்னையில் ரோஹிஞ்சா அகதிகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :