உ.பி.யில் தொடரும் பரிதாபம்: ஃபருக்காபாத் மருத்துவமனையில் 49 குழந்தைகள் மரணம்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஃபருக்காபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் நிகழ்ந்துள்ள பச்சிளங் குழந்தைகளின் மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோரக்பூரை தொடர்ந்து ஃபருக்காபாத் மருத்துவமனையில் குழந்தைகள் மரணம்

பட மூலாதாரம், Getty Images

ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 49 குழந்தைகள் இறந்துள்ளன.

இதில் ஆக்சிஜன் இல்லாததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துள்ள குறைந்தது 30 குழந்தைகளும் உள்ளடங்குவர்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் குறைந்தது 160 குழந்தைகள் உயிரிழந்தன.

இதில் பல மரணங்கள் ஆக்சிஜன் இல்லாததால் ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

தொடர்பான செய்திகள்:

ஆனால், குழந்தைகளின் இறப்புக்குக் காரணம் ஆக்சிஜன் விநியோகம் தடை காரணம் அல்ல என்றும், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் அப்பகுதியில் நிலவும் என்சிபாலிட்டிஸ் எனப்படும் மூளை வீக்க நோய் மற்றும் பிற காரணங்களால் இறந்தார்கள் என்றும், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங் தெரிவித்தார்.

கடந்த 2014, 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளின் ஆகஸ்ட் மாதங்களில் மட்டும், அந்த மருத்துவமனையில் உயிரிழந்த, உத்தரப்பிரதேசம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகளின் எண்ணிக்கை முறையே 567, 668 மற்றும் 587 என்று, சித்தார்த்நாத் சிங், மருத்துவக் கல்விக்கான அமைச்சர் அஷுதோஷ் டாண்டன் ஆகியோரின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :