நாடு திரும்பினார் பதவி விலகிய லெபனான் பிரதமர்

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு செளதி அரேபியாவில் இருந்தபடியே தனது பதவி விலகல் முடிவை அறிவித்தபிறகு முதல்முறையாக லெபனான் பிரதமர் சாத் அல்-ஹரிரி மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

சாத் அல்-ஹரிரி

பட மூலாதாரம், Reuters

அவர் லெபனான் திரும்பி, நேரில் வந்து தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கும்வரை அவரது பதவி விலகலை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று லெபனான் அதிபர் மிசேல் ஓன் கூறியிருந்தார்.

ஹரிரி விமானத்தில் இருந்து இறங்கியவுடன் அவரை பாதுகாப்புபடை உறுப்பினர்கள் அவரை வரவேற்பதை பெய்ரூட் சர்வதேச விமானநிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன.

ஹரிரி சௌதி அரேபியாவுக்கு மேற்கொண்டிருந்தபோது, தனது பதவிவிலகல் முடிவை அறிவித்தததால் லெபனானில் ஒரு அரசியல் நெருக்கடி உருவானது.

இரானுடனான பிராந்திய அதிகாரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக செளதி அரேபியா அவரைப் பதவி விலகுமாறு கட்டாயப்படுத்தியது எனும் யூகத்தை அவர் மறுத்தார்.

நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு மத்தியஸ்தம் செய்யும் பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங்கை சனிக்கிழமையன்று பாரிசில் சந்தித்தார் ஹரிரி.

காணொளிக் குறிப்பு, 'அட்லஸ்' என்று பெயர் இடப்பட்டுள்ள இந்த மனித உருவுள்ள ரோபோ

சௌதி அரேபியாவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஹரிரி, லெபனான் மற்றும் சௌதி ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையையும் பெற்றவர்.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தனது பதவி விலகலை திடீரென்று அறிவித்தார் ஹரிரி.

அப்போது இரான் மற்றும் ஹெஸ்புல்லா அமைப்பை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். கடந்த ஆண்டு அவர் அமைத்த அரசின் ஒரு பகுதியாக அந்த அமைப்பு இருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :