டோக்யோ ஒலிம்பிக்: போராடிய சிந்து; நம்பிக்கை தந்த பெண்கள் ஹாக்கி அணி - 10 தகவல்கள்

பட மூலாதாரம், Lintao Zhang/Getty Images
ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியின் இன்று இந்திய வீரர்கள் பலர் களம் கண்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிந்துவின் வெற்றி வாய்ப்பு தவறினாலும், இந்திய பெண்கள் ஹாக்கி அணி காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்திய வீரர்களின் இன்றைய ஆட்டம் குறித்த செய்தி தொகுப்பு இது.
- டோக்யோ ஒலிம்பிக்கின் மகளிர் பேட்மிண்டன் காலிறுதியில் வெற்றி பெற்ற இந்தியாவின் பி.வி. சிந்து அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார். சீன தைபேயைச் சேர்ந்த உலகின் முதல்நிலை வீராங்கனை தை சு யிங்-இடம் நேர் செட்டுகளில் அவர் இன்று தோல்வியடைந்தார்.
- தங்கம் மற்றும் வெள்ளி வெல்லும் வாய்ப்பை அவர் இழந்துள்ள நிலையில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீனாவின் ஹி பிங்ஜியாவோ உடன் சிந்து நாளை மோதவுள்ளார்.
- டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற மகளிருக்கான குத்துச்சண்டை 75 கிலோ எடைப்பிரிவின் கால் இறுதி போட்டியில் இந்தியாவின் பூஜா ராணி சீனாவின் லி சுவாங்கிடம் தோல்வியுற்றார்.
- ஆசியாவிலேயே சிறந்த மகளிர் ஹாக்கி அணியாக இந்திய அணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்திய பெண்க்ள் ஹாக்கி அணி காலிறுதிக்குள் நுழைந்துள்ளது.
- ஐயர்லாந்து அணியை கிரேட் பிரட்டன் அணி 2-0 என்ற கணக்கில் வென்றதால் A பிரிவில் ஐந்தாம் இடத்தில் இருந்த ஐயர்லாந்து அணி காலிறுதி போட்டிக்கு தகுதி பெற கிரேட் பிரிட்டன் அணியை வெற்றிக் கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், தோல்வியுற்றதால் இந்திய அணிக்கு காலிறுதி செல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
- அடுத்ததாக இந்திய ஹாக்கி அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவுள்ளது.
- முன்னதாக தென் ஆப்ரிக்க அணியை வெற்றிப் பெற்றிருந்தது பெண்கள் ஹாக்கி அணி. ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி அணியின் வந்தனா கட்டாரியா முதல் முறையாக ஹாட் டிரிக் எடுத்து சாதனை படைத்தார்.
- டோக்யோ ஒலிம்பிக்கின் 9ஆம் நாளான இன்று வட்டு எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் களமிறங்கிய கமல்ப்ரீத் கவுர் சிறப்பாக விளையாடி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இறுதிப் போட்டி ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெறுகிறது.
- சனிக்கிழமை நடந்த தகுதிப் போட்டியில் 64 மீட்டர் சராசரியுடன் இரண்டாம் இடத்தை அவர் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
- நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஸ்ரீ சங்கர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.
பிற செய்திகள்:
- பூஜா ராணி: ரகசியமாக குத்துச் சண்டை பயிற்சி; காயம் தந்த வலி - ஒலிம்பிக் வரை எட்டிய விடா முயற்சி
- பூத் ஜோலோகியா: 'பேய் பிடித்ததை போல' உணர வைக்கும் இந்திய மிளகாய்
- நீண்ட வாள், வெள்ளிக்காசு, புகைப்போக்கி குழாய் - தோண்ட தோண்ட கிடைக்கும் பழந்தமிழர் பொருட்கள்
- 13 மாதங்களில் 3 முறை கொரோனா - 2 டோஸ் தடுப்பூசி போட்டபின்னும் 2 முறை பாதிப்பு
- டோக்யோ ஒலிம்பிக்: அரையிறுதி போட்டிக்கு சென்ற லவ்லீனாவுக்கு பதக்கம் உறுதி, சிந்துவுக்கு ஏன் இல்லை?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








