டோக்யோ ஒலிம்பிக் 2020 பதக்கப் பட்டியல் - முதல் இரு இடங்களில் அமெரிக்கா, சீனா; இந்தியா 48ஆம் இடம்

பட மூலாதாரம், Pool
2020 டோக்யோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன.
இதில் 39 தங்கம், 41 வெள்ளி மற்றும் 33 வெண்கலம் என 113 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. டோக்யோ ஒலிம்பிக்கில் 100 பதக்கங்களுக்கும் மேல் வென்ற ஒரே நாடாக அமெரிக்கா உள்ளது.
அடுத்தபடியாக 38 தங்கம், 32 வெள்ளி மற்றும் 18 வெண்கலம் என 88 பதக்கங்களுடன் சீனா இரண்டாம் இடம் பிடித்தது.
போட்டியை நடத்திய ஜப்பான் 27 தங்கம், 14 வெள்ளி மற்றும் 17 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் மூன்றாமிடம் பிடித்தது.
ஜப்பானை விடவும் கூடுதலான பதக்கங்களை வென்றிருந்தாலும், தங்கப் பதக்கங்கள் குறைவாகவே வென்றதால் பிரிட்டன் அணி நான்காம் இடமே பெற்றது.
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் வென்ற இந்தியா பதக்கப் பட்டியலில் 48ஆம் இடம் பிடித்தது. அதிகம் பதக்கம் வென்ற நாடுகள் பட்டியலில் இந்தியா 33ஆம் இடம் பிடித்தது.
டோக்யோ ஒலிம்பிக்கில் இதுவரை இல்லாத அளவுக்கு 33 விளையாட்டுகளும் அவற்றில் 339 போட்டிகளும் நடந்தன. ஜப்பானில் 42 இடங்களில் போட்டிகள் நடந்தன.
இன்று நடந்த ஆண்களுக்கான நீர் போலோ விளையாட்டில் செர்பியா வென்றது 339வது மற்றும் கடைசி தங்கம் ஆகும். கிரீஸ் அணி இதில் வெள்ளி வென்றது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
2016க்கு பின் 2020இல் நடந்திருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டன. எனினும் 'டோக்யோ ஒலிம்பிக் 2020' என்றே இந்த ஒலிம்பிக் அலுவல்பூர்வமாக அழைக்கப்பட்டது.
எந்தெந்த நாடுகள் எத்தனை பதக்கம் வென்றன என்ற பட்டியல் கீழே.
நாடுகளின் பதக்க பட்டியல்:
தர வரிசை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












