இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற சுனில் சேத்ரி

மும்பையில் இன்று நடைபெற்ற அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படும் கண்டங்களுக்கு இடையேயான கால்பந்து கோப்பையின் முதல் சீசனில் கென்ய அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய கால்பந்து அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி

பட மூலாதாரம், twitter@IndianFootball

இந்திய அணியின் தலைவர் சுனில் சேத்ரி, இரண்டு கோல் அடித்து வெற்றிக்கு வழி செய்தார்.

தனது 100ஆவது சர்வதேச போட்டியில் வெற்றியை கண்டுள்ளார் அணி தலைவர் சுனில் சேத்ரி.

முன்னதாக சுனில் வீடியோ ஒன்றின் மூலம் ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகொள் ஒன்றை வைத்திருந்தார்.

"கால்பந்து விளையாட்டு அரங்கிற்கு வாருங்கள்; நீங்கள் மைதானத்தில் கத்தலாம், எங்களை திட்டலாம், விமர்சிக்கலாம்; யாருக்குத் தெரியும் ஒருநாள் இவை எல்லாவற்றையும் நாங்கள் மாற்றக்கூடும். நீங்கள் எங்களுக்காக மாறக்கூடும்'' என அந்த காணொளியில் கூறியிருந்தார் சுனில் சேத்ரி.

சுனில் விடுத்த கோரிக்கையை அடுத்து இன்று அரங்கம் நிறைந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: