கைகூப்பி வேண்டுகோள் விடுத்த சுனில் சேத்ரி : சச்சின், கோலியின் பதில் என்ன?
இன்று (திங்கள்கிழமை) தனது 100-ஆவது சர்வதேச போட்டியில் விளையாடவுள்ள இந்திய கால்பந்து அணித் தலைவர் சுனில் சேத்ரி, கடந்த சனிக்கிழமை வெளியிட்ட ஒரு காணொளிக்கு இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் கோலி மற்றும் முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆதரவு அளித்து ஒரு காணொளியை வெளியிட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Facebook/Sunil Chhetri/BBC
அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பால் கண்டங்களுக்கு இடையேயான கால்பந்து கோப்பையின் முதல் சீசன் இந்த ஆண்டு நடந்துவருகிறது.
ஜூன் 1- 10 வரை மும்பையின் அந்தேரி கால்பந்து மைதானத்தில் நடக்கவுள்ள இக்கோப்பையில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து , சைனீஸ் தைபய் எனும் நான்கு அணிகள் பங்கேற்கின்றன.
சுனில் சேத்ரி சமூக வலைதளத்தில் வெளியிட்ட காணொளியில் ஒன்றில் ரசிகர்கள் கால்பந்து மைதானத்துக்கு வந்து நேரில் ஆதரவளிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
''இணையதளத்தில் விமர்சிப்பது, ஏசுதல் போன்றவை வேடிக்கையானதல்ல. கால்பந்து விளையாட்டு அரங்கிற்கு வாருங்கள்; நீங்கள் மைதானத்தில் கத்தலாம், எங்களை திட்டலாம், விமர்சிக்கலாம்; யாருக்குத் தெரியும் ஒருநாள் இவை எல்லாவற்றையும் நாங்கள் மாற்றக்கூடும். நீங்கள் எங்களுக்காக மாறக்கூடும்'' எனக் கூறியுள்ளார் சுனில்.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு, 1
''கால்பந்துக்கு ரசிகர் அல்லாதவர்களிடம் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். நீங்கள் மைதானத்துக்கு வர வேண்டும். அதற்கு இரு காரணங்கள் உள்ளன. கால்பந்துதான் உலகில் சிறந்த விளையாட்டு என்பது ஒரு காரணம்; மற்றொன்று நாங்கள் நாட்டிற்காக விளையாடுகிறோம்'' என்கிறார் இந்திய கால்பந்து அணித் தலைவர்.
சமீபத்தில் இந்திய கால்பந்து அணி விளையாடிய ஒரு போட்டியில் 2569 ரசிகர்கள் மட்டுமே வந்திருதையடுத்து இந்த விஷயத்தை கையில் எடுத்து கை கூப்பி ஒரு காணொளியை வெளியிட்டார் 33 வயது கால்பந்து வீரர் சுனில் சேத்ரி.

பட மூலாதாரம், Facebook/Sunil Chhetri/BBC
ஐரோப்பிய கால்பந்து லீக் போட்டிகளுக்கு ரசிகர்களாக உள்ள இந்தியர்களை குறிவைத்தும் பேசியுள்ளார். '' சில நேரங்களில் நீங்கள் தரம் சமமானதாக இல்லையே பின்னர் ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும் என நினைக்கலாம். நான் ஒப்புக்கொள்கிறேன். நிலை சரி சமமாக இல்லை. ஏன் நெருக்கத்தில்கூட இல்லைதான். ஆனால் நீங்கள் நேரம் செலவிடுவதற்கு தகுதியானதாக்கும் அளவுக்கு எங்களின் ஆசை மற்றும் உறுதிப்பாட்டுடன் எங்களால் முடியுமளவு சிறப்பாக விளையாடுவோம்'' என்றார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
சுனில் சேத்ரி வெளியிட்டுள்ள காணொளியை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி ட்விட்டரில் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். ''விளையாட்டுக்கு மதிப்பளிக்கும் பெருமை மிக்க தேசமாக இந்தியாவாக கருத விரும்பினால் அனைத்து விளையாட்டுகளையும் ஏற்றுக்கொண்டு மதிப்பளிக்க வேண்டும் '' எனக் கூறியுள்ளார்.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு, 2
'' நம் விளையாட்டு வீரர்கள் நாட்டுக்கு பெருமை சேர்க்க கடுமையாக பயிற்சி செய்கிறார்கள். ஒரு விளையாட்டு வீரனுக்கு மிகப்பெரிய கனவு நாட்டுக்காக விளையாடுவதே. இந்திய கால்பந்து அணிக்கு பின் நிற்போம்; ஆதரவளிப்போம்'' என சச்சின் டெண்டுல்கர் தனது காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணி ஜூன் 4, ஜூன் 7 தேதிகளில் கென்யா மற்றும் நியூசிலாந்து அணிகளை எதிர்த்து விளையாடவுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












