#RCBvCSK: அதிரடி ஃபினிஷர் தோனி - சோகமான அனுஷ்கா

இந்த ஐபிஎல் சீசன் முடிவதற்குள் எத்தனை சிஎஸ்கே ரசிகர்கள் ரத்த அழுத்தம் பிரச்சனையால் அவதிப்பட போகிறார்களோ தெரியவில்லை. சிஎஸ்கே அணி ஆடும் போட்டிகளில் சுவாரஸ்யங்களுக்கும், திடீர் அதிர்ச்சிகளுக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லை.

தோனி

பட மூலாதாரம், Instagram/MS Dhoni

பட்டியலில் முதலிடம் பெற்ற சிஎஸ்கே

பெங்களூரில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றிப் பெற்றதையடுத்து பத்து புள்ளிகளுடன் ஐபிஎல் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், கடைசி இடத்தில் டெல்லி அணியும் இடம்பிடித்துள்ளது.

சொந்த மண்ணில் வீழ்ந்த பெங்களூரு

இந்த ஐபிஎல் சீசனின் 24வது போட்டி பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிறகு 206 ரன்களை சென்னை அணிக்கு இலக்காக வைக்க தோனியின் அதிரடி ஃபினிஷிங்கால் 19.4 ஓவர்களில் 207 ரன்களை பெற்று போட்டியில் சென்னை அணி வெற்றிப்பெற்றது.

நொறுங்கிப்போன விராட் அணி

#RCBvCSK: அதிரடி ஃபினிஷர் தோனி - களையிழந்த அனுஷ்கா ஷர்மா

பட மூலாதாரம், Getty Images

சென்னைக்கு 206 ரன்கள் இலக்காக நிர்ணயித்த பெங்களூரு அணி பேட்டிங்குக்கு பிறகு மிகுந்த உற்சாகமாக காணப்பட்டனர். ஆனால், இரண்டு மணிநேரம் கழித்து சென்னை வெற்றிப் பெற்றதையடுத்து மைதானத்திலிருந்து தலைகுனிந்தப்படியே வெளியே வந்த பெங்களூரு வீரர்களிடம் முன்பு இருந்த உற்சாகம் இல்லை. அதற்கு ஒரே காரணம் தோனி.

தோனியை ஏன் கூல் கேப்டன் என்கிறார்கள்?

#RCBvCSK: அதிரடி ஃபினிஷர் தோனி - களையிழந்த அனுஷ்கா ஷர்மா

பட மூலாதாரம், Chennai Super Kings

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

சென்னை பேட்டிங்கை ஆரம்பித்து 12 ஓவர்களில் வெறும் 100 ரன்களை எட்டியிருந்தது. இன்னும் 8 ஓவர்களே இருந்த நிலையில் 106 ரன்கள் எடுக்க வேண்டும். துளிகூட பதட்டமின்றி வெளுத்துவாங்கினார் தோனி. தோனி - ராயுடுவின் அபாரமான இணை அணியின் வெற்றிக்கு வித்திட்டது.

தோனி தனது ஸ்டையிலில் சிக்சர் பறக்கவிட்டு போட்டியை முடித்து வைக்க, மைதானத்திற்கு வெளியே இருந்த ஹர்பஜன் ஆர்ப்பரித்தப்படி மைதானத்திற்குள் நுழைந்து தோனியை தூக்க முயன்றார். ஆனால், தோனி அதற்கு மறுப்பு தெரிவிக்க, பாஜி சமாதானம் செய்து சில நொடிகள் தனது கூல் கேப்டனை அலேக்காக தூக்கினார்.

களையிழந்த அனுஷ்கா ஷர்மா

#RCBvCSK: அதிரடி ஃபினிஷர் தோனி - களையிழந்த அனுஷ்கா ஷர்மா

பட மூலாதாரம், Getty Images

கணவர் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தை காண நடிகை அனுஷ்கா ஷர்மாவும் சின்னசாமி மைதானத்திற்கு வந்திருந்தார். ஆர்சிபி வீரர்கள் சிஎஸ்கே பேட்மேன்களை அவுட்டாக்கிய போதெல்லாம் ஆரவாரமாக ரசித்த அனுஷ்கா பெங்களூரு அணி தோல்வியை தழுவிய சோகத்தில் மவுனமாக காணப்பட்டார். ஆட்ட முடிவில் அவரிடமிருந்த சிரிப்பு தோனி மனைவி சாக்‌ஷி முகத்திற்கு மாறியிருந்தது.

ஃபினிஷரின் வேலை பணியை முடிப்பதே

34 பந்துகளில் 70 ரன்களை குவித்த தோனி 7 சிக்ஸர்களை விளாசியிருந்தார். இந்த ஐபிஎல் போட்டிகளிலேயே அதிக சிக்ஸர்கள் விளாசப்பட்ட போட்டியாக #RCBvCSK போட்டி பார்க்கப்படுகிறது. அடிக்கப்பட்ட 33 சிக்ஸர்களில், சென்னை அணி 17 சிக்ஸர்களை அடித்திருந்தது. ஃபினிஷரின் வேலை பணியை முடிப்பதும், அனுபவத்தை சக வீரர்களுடன் பகிர்ந்து கொள்வதும் என்று ஆட்ட நாயகன் விருது பெற்ற தோனி தெரிவித்தார்.

களத்தில் அதிரடி ஃபினிஷர் - வீட்டில் பாசக்கார தந்தை

Instagram பதிவை கடந்து செல்ல
Instagram பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

Instagram பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: