கொரோனா வைரஸ் தடுப்பூசி: கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரகால ஒப்புதல்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கான தடுப்பூசிகளின் பட்டியலில் உலக சுகாதார அமைப்பு சேர்த்துள்ளது.
இந்த மருந்து 78% பாதுகாப்பளிப்பதாகத் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, கர்ப்பிணிகள் உடலில் இதைச் செலுத்தலாமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.
இந்தியாவில் கோவிஷீல்டு என அழைக்கப்படும் ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ரா செனீகா தடுப்பு மருந்து, ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பு மருந்து, மாடர்னா தடுப்பு மருந்து ஆகியவற்றைப் போல, கோவிட்- 19 தொற்றை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம் என உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ள தடுப்பூசிகளின் பட்டியலில் தற்போது கோவேக்சின் தடுப்பு மருந்தும் சேர்ந்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இது குறித்த 10 முக்கியத் தகவல்கள் இதோ.
- உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனை குழு மற்றும் உலகெங்கிலுமுள்ள நாடுகளின், மருத்துவ ஒழுங்காற்று அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள் குழு ஆகியவை கோவேக்சின் தடுப்பு மருந்து கொரோனாவுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்று ஆராய்ந்தபின், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- கோவேக்சின் தடுப்பூசி கோவிட்-19 தொற்றுக்கு எதிராக உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள தரநிலைகளின் அடிப்படையில் பாதுகாப்பு அளிப்பதாக உலக சுகாதார அமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோவேக்சின் தடுப்பூசியால் கிடைக்கும் பலன்கள் அதன்மூலம் உண்டாக வாய்ப்பு உள்ள பாதிப்புகளை விடவும் அதிகமாக உள்ளது என்றும் இந்த தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
- 'SAGE' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உலக சுகாதார நிறுவனத்தின் நோயெதிர்ப்பு நிபுணர்களின் மூலோபாய ஆலோசனைக் குழுவினர் (Strategic Advisory Group of Experts on Immunization) கோவேக்சின் தடுப்பு மருந்தை ஆய்வுக்கு உட்படுத்தியதாகவும், இதை இரண்டு டோஸ்களாக மனித உடலில் செலுத்த பரிந்துரை செய்ததாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
- 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு நான்கு வார கால இடைவெளியில் இந்த தடுப்பு மருந்தை செலுத்த அந்த நிபுணர் குழு உலக சுகாதார அமைப்புக்கு பரிந்துரை செய்திருந்தது.
- கர்ப்பிணி பெண்களின் உடலில் கோவேக்சின் தடுப்பு மருந்து பாதுகாப்பாகவும், செயல் திறனுடனும் இயங்குகிறதா என்பதை அறிவதற்கான போதிய தரவுகள் இல்லை என்று தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு இது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
- உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி கோவேக்சின் தடுப்பு மருந்து, இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்ட 14 நாட்கள் அல்லது அதற்கு பிந்தைய காலத்தில் கோவிட் தொற்றுக்கு எதிராக, மனித உடலுக்கு 78 சதவிகித வீரியத்துடன் செயல்படுகிறது.
- கோவேக்சின் தடுப்பு மருந்தை பாதுகாத்து வைப்பது மிகவும் எளிது என்பதால் இது குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளுக்கு மிகவும் பொருத்தமானது என்கிறது உலக சுகாதார அமைப்பு.
- ஒரு தடுப்பு மருந்தின் தரம், பாதுகாப்பு செயல்திறன், மோசமான பின் விளைவுகள் ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்கான திட்டம், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளுக்கு நாடுகளில் பயன்படுத்துவதற்கான பொருத்தம் ஆகியவற்றின் அடிப்படையில் தடுப்பு மருந்துகளுக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதியை உலக சுகாதார அமைப்பு வழங்கி வருகிறது.
- அவசரகால பயன்பாட்டு அனுமதிக்கான பட்டியலில் தடுப்பூசிகளைச் சேர்க்க முடிவு செய்யும் நிபுணர் குழுவில் (Technical Advisory Group for Emergency Use Listing) ஐந்து பேர் உள்ளனர்.
பிற செய்திகள்:
- அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிக்கும் சீன மக்கள் - திடீர் பதற்றம் ஏன்?
- தமிழ்நாட்டுக்கு மூவேந்தர் கொடி - சீமான் மீது வழக்கு ஏன்?
- 87 வயதில் முதுகலை பட்டம்: கனடாவில் சாதித்த இலங்கை தமிழ் பெண்
- 'சீன, ரஷ்ய அதிபர்கள் செய்தது தவறு: COP26 மாநாட்டில் விமர்சித்த பைடன்'
- தீபாவளி உணவுகள்: தென்னிந்தியா, வடஇந்தியா இடையே வேறுபாடு என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








