நன்றி நேயர்களே!
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
கொரோனா வைரஸ் தொற்றால் உலகிலேயே இதுவரை அமெரிக்காவில்தான் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு 20,000க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகி இருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறுகின்றன.
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
கொரோனா தொடர்பாக இன்று சர்வதேச அளவில் நடந்த முக்கிய தகவல்களைப் பார்ப்போம்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு லண்டன் புனித தாமஸ் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடு திரும்பியுள்ளார்.
சரியாக ஒரு வாரம் மருத்துவமனையிலிருந்த அவர் ஐந்து நாட்களுக்கு மேல் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்தார். வீடு திரும்பி இருந்தாலும், உடனே பணிக்குத் திரும்ப மாட்டார் எனப் பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது.
தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் இருப்பார் என தகவல்கள் கூறுகின்றன. இப்படியான சூழலில் தேசிய சுகாதார அமைப்புக்கு நன்றி தெரிவித்து காணோளி வெளியிட்டுள்ளார் போரிஸ் ஜான்சன்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த கெய்த் என்ற 101 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கெய்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
லண்டனில் நிலை இவ்வாறாக இருக்க புனித ஈஸ்டர் தினமான இன்று தேவாலயங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் மக்கள் கூட்டமின்றி போப் பிரான்சிஸ் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
இந்த வாரம் நடைபெற்ற அனைத்து பிரார்த்தனைகளும் பொதுமக்கள் கூட்டம் இன்றி நடைபெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தின பிரார்த்தனையில் 70,000 பேர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலி முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில், வத்திகானிற்கு அம்மாநில காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என போப் பிரான்சிஸ் மக்களை வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் முதலில் பரவ தொடங்கிய சீனாவில் ஆப்ரிக்கர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் ஆப்பிரிக்கர்களுக்குத்தான் அதிகமாக கொரோனா வைரஸ் பரவுகிறது என்று சீனாவில் பரவிய வதந்தியால், சீனாவில் உள்ள ஆப்ரிக்கர்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள்.
சீனாவின் குவான்சவோ நகரத்தில் கொரோனா வைரசால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அச்சம் நிலவுவதால், அங்கு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நூற்றுக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் தற்போது வசிக்க வீடு இன்றி தவிக்கின்றனர்
ஸ்பெயினில் மீண்டும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 3 வாரங்களில் இல்லாத அளவுக்குக் கடந்த சனிக்கிழமை கொரோனா பலி எண்ணிக்கை குறைந்திருந்தது.
இப்படியான சூழலில் மீண்டும் அங்கு பலி எண்ணிக்கை உயரத் தொடங்கி உள்ளது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 109 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயின் மட்டும் இதுவரை 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையெல்லாம் கடந்து அச்சம் தரும் விஷயம் என்னவென்றால் கொரோனா வைரஸ் இப்போது ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தைவிட இவை எல்லாம் சரியான பின் அது ஏற்படுத்த போகும் தாக்கம்தான் மிக மோசமாக இருக்கும் என்று நோம் சாம்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தத்துவயியல் நிபுணரும், மொழியியல் நிபுணருமான நோம் சாம்ஸ்கி, "தொற்றுநோய்க்கு பிந்தைய சாத்தியக்கூறுகள் தீவிர சர்வாதிகாரம் உடைய மிருகத்தனமான அமைப்புகளை நிறுவுவதிலிருந்து … லாபமற்று மனிதாபிமானத்துடன் இயங்கிய அமைப்புகளை முழுவதுமாக சிதைப்பது வரை இருக்கும்," என்று எச்சரிக்கிறார்.
"இந்த அதிக சர்வாதிகாரம் நிறைந்த, மோசமான அமைப்புகள் புதிய தாராளமயத்துடன் மிகவும் ஒத்துப்போகும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்." என்று நோம் சாம்ஸ்கி ஒரு உரையாடலில் தெரிவிக்கிறார்.
அதுபோல எட்வர்ட் ஸ்னோடென் கொரோனா வைரஸை பயன்படுத்தி உலகெங்கும் அரசுகள் அதீத அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி செய்யும் என எச்சரிக்கிறார்.
பொருளாதாரமும் 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமாக பாதிக்கப்படும் என்கிறது உலக நாணய நிதியம். இந்த பெருந்தொற்று பரவல் முடியும்போது உலக மக்கள் தொகையில் பாதிபேர் ஏழ்மையில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தை நெருங்குகிறது. அமெரிக்காவில் மட்டும் 5 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
அடுத்தடுத்த இடங்களில் இத்தாலியும் ஸ்பெயினும் உள்ளது,
நிலைமை இப்படியாக இருக்க ஒரு நம்பிக்கையான செய்தி வெளிவந்துள்ளது. அதாவது வரும் இலையுதிர் காலத்திற்குள் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து சிலருக்குக் கிடைக்கத் தொடங்கிவிடும் என்ற செய்திதான் அது.
வெல்கம் அறக்கட்டளையின் இயக்குநர் இதனை ஒரு காணொளியில் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரம் இந்த தடுப்பு மருந்தானது கோடிக்கணக்கான மக்களுக்கும் உடனே கிடைக்காது.
அடுத்த மூன்று மாதங்கள் சோதனை செய்யப்படும் இந்த மருந்து செப்டம்பரில் கிடைக்க தொடங்கிவிடும் என்கிறார்.
சரி இந்திய நிலவரத்துக்கு வருவோம், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7409 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 918 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 31 பேர் பலியாகி உள்ளனர்.
பல நாடுகள் இந்தியாவிடம் ஹைட்ராக்ஸிக்ளோரிகியூன் மருந்து கேட்டுள்ளதாக இந்திய அரசு கூறி உள்ளது. நமது தேவை என்ன என்று மதிப்பிடப்பட்டப் பின், 13 நாடுகளுக்கு மருந்து அனுப்படும் என இந்திய அரசின் முதன்மை செய்தி தொடர்பாளர் தெரிவிக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1075ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கையில் எட்டு மருத்துவர்களும் அடங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை கொரோனா தாகத்திற்கு ஆளான மருத்துவர்களில் இரண்டு மருத்துவர்கள் அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் என்றும் இரண்டு மருத்துவர்கள் ரயில்வே மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் என்றும் நான்கு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள் என பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
52 நாடுகளில் 22,073 மருத்துவ பணியாளர்களுக்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது

பட மூலாதாரம், Getty Images
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பிரிட்டன் நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை லண்டன் புனித தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஒருவார சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார்.
உலக நாடு ஒன்றின் அரசுக்குத் தலைமை தாங்குபவர்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபரான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த செவ்வாய்க்கிழமை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்ததால் மருத்துவர்கள் ஆலோசனைக்குப் பிறகு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவர் வீடு திரும்பி உள்ள போதும் உடனே பணிக்குத் திரும்பமாட்டார் எனப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Facebook
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1075ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையில் எட்டு மருத்துவர்களும் அடங்குவார்கள் என்றார்.
புதிதாக கொரோனா தாகத்திற்கு ஆளானவர்கள் என இன்று (ஏப்ரல் 12)அடையாளம் காணப்பட்ட 106 நபர்களில், 16 நபர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்குப் பயணம் சென்றவர்கள் என்றும் மீதமுள்ள 90 நபர்கள் நோய் தொற்று ஏற்பட்டவர்களோடு தொடர்பிலிருந்தவர்கள் என தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போது வரை கொரோனா தாகத்திற்கு ஆளான மருத்துவர்களில் இரண்டு மருத்துவர்கள் அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் என்றும் இரண்டு மருத்துவர்கள் ரயில்வே மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் என்றும் நான்கு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள் என பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போதுவரை 39,401 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் கொரோனா பாதிப்பு உள்ளதா என 10,655 மாதிரிகளை சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் ஆராய்ச்சியில் தமிழகம் முன்னோடியாக திகழ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறிய அவர், தமிழகத்தில் இதுவரை 50 நபர்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என்றும் குணம் பெற்ற நபர்களின் பிளாஸ்மாவை சேகரித்து ஆய்வு நடந்துவருகிறது என்றார்.

கொரோனாகாரணமாக ஊரடங்கை நீடிப்பதுதொடர்பான அறிவிப்பைத்தமிழக அரசு வெளியிடாமல், மத்திய அரசின்உத்தரவுக்காகக்காத்திருப்பதை ஸ்டாலின் முன்னர் விமர்சனம் செய்தார். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் தந்துள்ளார். தற்போது அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலினின் விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கொரோனாதொற்றைக்கட்டுப்படுத்த தமிழக அரசு பல கட்டங்களில் முயற்சி எடுத்துவரும் நேரத்தில், தேவையற்ற கருத்துக்களை ஸ்டாலின்பேசிவருவதாகத்தெரிவித்தார்.
''பேரவைக்கு வந்தால்கொரோனாபரவும்; வெளியே சென்றால்கொரோனாபரவாது. இது தான் ஸ்டாலினின் பாணி. மார்ச் 16ஆம்தேதியிலிருந்தேகொரோனாதடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. தலைமைச் செயலாளர் தலைமையில்உயர்மட்டக்குழுஅமைக்கப்பட்டு, தினமும்கொரோனாதொடர்பான விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும் சட்டமன்றத்தில் கூட கொரோனாதடுப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் முதல்வர் விளக்கம் தந்துள்ளார். இவற்றையும் தாண்டிஏன் முதல்வரின்யதார்த்தமானகருத்துகளைகூட ஸ்டாலின் விமர்சிக்கிறார்எனதெரியவில்லை,'' என்றார் ஜெயக்குமார்.
அதிமுக அரசை மக்கள் பாராட்டும் நிலையில், அதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பதால் விமர்சனம் வருகிறது என்று கூறிய அவர், ''மைக்ரோஸ்கோப்மூலம் பார்த்தால் கூட அதிமுக அரசில் எந்தக் குறைகளையும் காண முடியாது. மத்திய அரசு ஊரடங்குபிறப்பித்தற்குமுன்பே தமிழக அரசு மார்ச் 31 வரை ஊரடங்கு என அறிவித்தது. தமிழக அரசு மத்திய அரசிடம் தேவையானநிதியைக்கேட்டுவாங்குவதிலும் முனைப்போடு செயல்படுகிறது, ''என்றும் தெரிவித்தார்.
தாயின் அன்புக்கு நிகர் ஏது? ஆந்திராவில் சிக்கிக்கொண்ட மகனை தெலங்கானவிலிருந்து டூவீலரை எடுத்துகொண்டு புறப்பட்டு மகனை பத்திரமாக மீட்ட ஒரு தாயின் உருக்கமான கதை இது

பட மூலாதாரம், Getty Images
கொரோனாவுக்கு பிந்தைய காலக்கட்டம்தான் கடுங்காலமாக இருக்கப் போகிறது. தீவிர சர்வாதிகாரம் உடைய மிருகத்தனமான அமைப்புகள் நிறுவப்படும் என எச்சரிக்கிறார்கள். இன்னொரு பக்கம் பொருளாதாரம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிதையும் என்கிறார்கள்.
விரிவாகப் படிக்க: “அதீத அதிகாரத்தை கைப்பற்ற கோவிட் 19ஐ அரசுகள் பயன்படுத்தும்”
உலகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் கொரோனா பற்றிய பேச்சாகத் தான் இருக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் என்ற வார்த்தைக்கே ஒரு நாட்டில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அது எந்த நாடு தெரியுமா?
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
கொரோன வைரஸ் தொற்று காரணமாக உலக பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
1930களில் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார மந்தநிலைக்கு பிறகு, உலக பொருளாதாரம் இப்போதுதான் இவ்வளவு கடுமையான நெருக்கடியை சந்திக்க போகிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா கூறியுள்ளார்.
2021ஆம் ஆண்டில் கூட, இதிலிருந்து பாதி அளவே மீள முடியும் என்று அவர் கணித்துள்ளார்
ஏப்ரல் 8ஆம் தேதி வரை, 52 நாடுகளில் 22,073 மருத்துவ பணியாளர்களுக்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து நாடுகளில் இருந்தும் முழுமையான தரவுகள் கிடைக்கப் பெறவில்லை என்பதால், இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் மருத்துவப் பணியாளர்களின் பங்கு மிக முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ள சுகாதார நிறுவனம், இத்தொற்றால் பாதிக்கப்படுபவர்களை மருத்துவப் பணியாளர்களே முழுமையாக பார்த்துக் கொள்கின்றனர். அது பரவாமல் இருக்க அவர்கள் போராடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கொரோனாவை சமாளித்தது எப்படி என்பது குறித்து வுஹான் மக்கள் உலகத்துக்கு பகிர்ந்து கொள்கிறார்கள்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
உலகின் பல்வேறு நாடுகள் முடக்கத்தில் இருக்கும் நிலையில்,ஈஸ்டர் பண்டிகையை புதுவிதமாக மக்கள் கொண்டாடினர். சில நாடுகளில் இணையதளம் மூலம் கூட்டு வழிப்பாடு செய்யப்பட்டது.

பட மூலாதாரம், EPA

பட மூலாதாரம், EPA

பட மூலாதாரம், Reuters
பொது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் வெளியிடங்களில் இருக்கும்போது, குறைந்தபட்சம் கைகுட்டை, துப்பட்டா,துண்டு அல்லது அங்கவஸ்திரம் போன்றவற்றை முகத்தை மூடிக்கொள்ள பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
பீலா ராஜேஷ் பதிவிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ஒவ்வொவரும் தினமும் பயன்படுத்தும் உடைகளில் தூய்மையான துணியை முகக்கவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். சோப்பால் துவைத்து, சூரிய ஒளியில் உலர்த்திய துணியை முகக்கவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.வீட்டில் உள்ள துணியில் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் தூய்மையானதாக இருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்றுவார காலமாக சரிந்து வருகிறது.
இந்நிலையில், பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் பலியாவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், இந்தியாவின் மாற்று மருத்துவ முறைகளில் ஒன்றான சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் ஒரு மருந்தாக முன்வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல இடங்களில் இந்த மருந்தை வாங்க மக்கள் கடைகளில் குவிந்தனர். உண்மையில் கபசுர குடிநீர் என்பது என்ன, அது கொரோனாவை குணப்படுத்துமா, மாற்று மருத்துவ முறைகளில் கொரோனாவுக்கு தீர்வு இருக்கிறதா என்பதெல்லாம் குறித்து மூத்த சித்த மருத்துவர்களில் ஒருவரான கு. சிவராமன், பிபிசியின் செய்தியாளரான முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 909 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 34 பேர் இறந்துள்ளதாகவும் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சம் தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,356ஆக உயர்ந்திருக்கிறது.
இந்நிலையில், இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று இந்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை அன்று கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோதி வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஊரடங்கு உத்தரவை நீட்டிக்குமாறு பல மாநில முதலமைச்சர்கள் பிரதமருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து ட்வீட் செய்திருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் ஒப்புக் கொண்டதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், ஒடிஷா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்கள் ஊரடங்கை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன.
கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படவேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோதியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
பிரதமர் மோதி வெளியிடவுள்ள அறிவிப்பை பொறுத்து தமிழக அரசு முடிவை அறிவிக்கும் என்று தமிழக தலைமை செயலர் சண்முகம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
கொத்து கொத்தாக குவியும் சடலங்கள்... அடக்கம் செய்ய இடமில்லாமல் தவிக்கும் உலக நாடுகள்.
பிரிட்டனில் நேற்று ஒரே நாளில் 917 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இதனால் பிரிட்டன் மருத்துவமனைகளில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,875 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக 900க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன.
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவ பணியாளர்களுக்கு தான் கடமைப்பட்டிருப்பதாக தன் நண்பர்களிடம் கூறியுள்ளார்.
போரிஸ் ஜான்சன் வரும் வாரங்களில் ஓய்வு எடுத்து கொண்டு, உடல் நலம் தேறிய பிறகே பணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்,தேசிய மருத்துவ சுகாதார பணியாளர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு உடையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் தன்னை மன்னிக்க வேண்டும் என அந்நாட்டின் உள்துறை செயலாளர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் அமெரிக்காவில்தான் அதிகம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அங்கு 20,000க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகி இருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறுகின்றன.
இரண்டு நாட்களுக்கு முன்னர்தான், எங்கும் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் அங்கு 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
எனினும், இறப்பவர்களின் எண்ணிக்கை சற்று நிலையாகி வருவதாக நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோ தெரிவித்தார்.
நியூயார்க்கில் கடந்த 24 மணி நேரத்தில் 783 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த சில தினங்களாக கிட்டத்தட்ட இதே எண்ணிக்கை தொடர்ந்து நீடிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் இதுவரை 5,20,000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தொற்றின் மையமாக விளங்கும் நியூயார்க்கில் 1,80,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதும் இதில் அடங்கும்.
அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களும் இத்தொற்றை பேரழிவாக அறிவித்துள்ளன.
எனினும், இத்தொற்றால் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் மற்றும் மரணங்கள் சற்று குறைந்து வருவதாக தெரிவித்த அமெரிக்காவின் தொற்று நோயியல் தலைவர் அந்தோனி ஃபாசி, இதனால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்று தெரிவித்தார்.
ஏப்ரல் 30ஆம் தேதி வரை சமூக விலகல் மற்றும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் 1.6 கோடி அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளதோடு, கொரோனா வைரசால் அமெரிக்க பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பட மூலாதாரம், g