தேர்வில் "பிட்அடிக்க" உதவும் பனியன்
இந்தியாவில் தேர்வுகளில் மிகப்பெரிய அளவில் ஏமாற்றுதல் நடந்ததாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து இந்திய உச்சநீதிமன்றம் ஆறுலட்சம் மாணவர்களை மீண்டும் தேர்வுகள் எழுதும்படி ஆணையிட்டது.
சமீபகாலமாக, தேர்வுகளை ஏமாற்ற தேர்வு அறைகளுக்கு வெளியில் இருந்து உதவி பெறுபவர்கள், தொழில்நுட்பத்தை துணைக்கு வைத்துக்கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள்.
இப்படியானவர்களுக்கு உதவக்கூடிய கருவிகளை விற்கும் தனியான சந்தைகளே தயாராகிவிட்டன. அதில் ஒன்றுதான் இந்த காணொளியில் இருக்கும் பிட் அடிக்கப் பயன்படும் பனியன்கள்.

இந்த பனியனுக்குள் மைக்ரோபோனும், செல்பேசியின் ஒலிவாங்கியும் உள்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் வழியாக வரும் தகவலை காதுக்குள் சொல்ல சின்ன ஆண்டெனாவுடனான புளூடூத் இணைக்கப்பட்டிருக்கும். இது செயற்படும் விதத்தை இந்த காணொளியில் காணலாம்.