கொரோனா தடுப்பூசி: 15-18 வயதுடையோருக்கு எப்போது போடலாம்? எப்படி விண்ணப்பிப்பது? - முக்கிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் 15 முதல் 18 வயதுடையோருக்கு போடுவதற்கான வழிகாட்டுதல்களை இந்திய சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கிறது.
கொரோனா பாதிப்பு மற்றும் ஒமிக்ரான் பரவலின் உலகளாவிய தாக்கத்தை கவனத்தில் கொண்டு இந்தியாவில் 15 முதல் 18 வயதுடையடையோருக்கு கொரோனா தடுப்பூசி போட சில வழிகாட்டுதல்களை இந்திய சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கிறது.
இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய சுகாதாரத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களின் முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
1. கொரோனா தடுப்பூசி 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு 2022ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி முதல் போடப்படும். அத்தகைய பயனாளிகளுக்கு இந்திய தயாரிப்பான "கோவாக்சின்" மட்டுமே செலுத்தப்படும்.2. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இரண்டு டோஸ்களைப் பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் (HCWs) மற்றும் முன்கள பணியாளர்களுக்கு (FLWs) சிறப்பு டோஸ் தடுப்பூசி 2022ஆம் ஆண்டு ஜனவரி 10 முதல் வழங்கப்படும். இரண்டு டோஸ் போட்டுக் கொண்ட நாளில் இருந்து ஒன்பது மாதங்களை கடந்திருந்தால் இந்த சிறப்பு டோஸ் போட முன்னுரிமை மற்றும் வரிசைப்படுத்துதல் கணக்கிடப்படும். அதாவது 2ஆம் டோஸ் போட்டதில் இருந்து அந்த பயனாளி 39 வாரங்களைக் கடந்திருந்தால் சிறப்பு டோஸ் பெற தகுதி பெறுகிறார்.
3. இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியைப் பெற்ற 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து நபர்களுக்கும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் 2022ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி முதல் 'முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி' வழங்கப்படும்.அனைத்து குடிமக்களும் அவர்களின் வருமான நிலையைப் பொருட்படுத்தாமல், அரசாங்கத்தில் இலவச கொரோனா தடுப்பூசியைப் பெற உரிமை உண்டு. தடுப்பூசி மையங்கள், பணம் செலுத்தும் திறன் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளின் தடுப்பூசி மையங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.கோ-வின் அம்சங்கள் மற்றும் ஏற்பாடுகள்

பட மூலாதாரம், Getty Images
சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் இணை நோய் குறைபாடுடைய 60+ வயதை கடந்த குடிமக்கள், ஏற்கெனவே Co-WIN கணக்கு மூலம் முன்னெச்சரிக்கை டோஸிற்கான தடுப்பூசியை பெற விண்ணப்பிக்கலாம்.அத்தகைய பயனாளிகளின் முன்னெச்சரிக்கை டோஸிற்கான தகுதியானது, கோவின் கணக்கில் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி, 2வது டோஸ் பெற்ற தேதியின் அடிப்படையில் இருக்கும்.கோ-வின் அமைப்பு அத்தகைய பயனாளிகளுக்கு அவர்களுக்கான டோஸ் பெறவேண்டிய நாள் குறித்த தகவலை குறுஞ்செய்தியாக (SMS) அவர்கள் பதிவு செய்த செல்பேசி எண்ணுக்கு அனுப்பும்.பதிவு மற்றும் சந்திப்பு சேவைகளை ஆன்லைன் மற்றும் ஆன்சைட் முறைகள் மூலம் அணுகலாம்.முன்னெச்சரிக்கை டோஸ் பெறப்படும் விவரங்கள் தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதிபலிக்கும்.15-18 வயதுடைய புதிய பயனாளிகள்:15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவரும் Co-WIN இல் பதிவு செய்ய முடியும். அவர்களின் பிறந்த ஆண்டு 2007 அல்லது அதற்கு முன் உள்ள அனைவரும் தகுதி பெறுவார்கள்.பயனாளிகள் சுய-பதிவு செய்யலாம், Co-WIN இல் ஏற்கெனவே உள்ள கணக்கு மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம் அல்லது தனிப்பட்ட செல்பேசி எண் மூலம் புதிய கணக்கை உருவாக்கி பதிவு செய்யலாம், இந்த வசதி தற்போது தகுதியுள்ள அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்கிறது.அத்தகைய பயனாளிகள் எளிதாக பதிவு முறையில் சரிபார்ப்பவர்/தடுப்பூசி மூலம் ஆன்சைட்டில் பதிவு செய்யலாம்.சந்திப்புகளை ஆன்லைனில் அல்லது ஆன்சைட்டில் பதிவு செய்யலாம் (நேரடியாக).
அவசர பயன்பாடு பட்டியலில் உள்ள தடுப்பூசியாக கோவாக்சின் இருப்பதால், 15-17 வயதிற்குட்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது. இந்த வழிகாட்டுதல்கள் 2022ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இந்த திட்டம் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படும் என்று இந்திய அரசு கூறியுள்ளது.
பிற செய்திகள்:
- பிபிசி தமிழில் 2021இல் அதிகம் படிக்கப்பட்ட 10 கட்டுரைகள் எதைப் பற்றியவை?
- வேலூரில் தொடர்ந்து உணரப்படும் நில அதிர்வுகளுக்கு காரணம் என்ன?
- 'எமோஷனலாக சத்தம் போட்டுவிட்டேன்' - தூத்துக்குடி தனியார் நிறுவனத்தோடு மோதிய தி.மு.க எம்.எல்.ஏ
- ஆப்கன் பெண்கள் நீண்ட தூரம் பயணிக்க ஆண் உறவினர் துணை அவசியம்: தாலிபன்
- மருத்துவப் படிப்பில் 13 தங்கப் பதக்கம்: இலங்கை தமிழ் பெண் சாதனை
- மாஸ்டர் முதல் அண்ணாத்த வரை: 2021 தமிழ் திரைப்படங்களில் பெண்கள் என்ன செய்தனர்?
- தமிழ்நாட்டில் தடுப்பூசி: சிறுவர்களுக்கு முதல் டோஸ், முதியோருக்கு 3ஆவது டோஸ் எப்போது?
- பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் காலமானார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








