கிரேட்டா துன்பர்க் 'டூல்கிட்' வழக்கு: 22 வயது மாணவி திஷா ரவி கைது - டெல்லி விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், disha ravi facebook
இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஸ்வீடனைச் சேர்ந்த செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பர்க் ட்விட்டரில் பகிர்ந்த `டூல்கிட்` தொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த மாணவியும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான செயலாளருமான 22 வயதாகும் திஷா ரவி பிப்ரவரி 13ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்கான அல்லது திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளை கொண்டுள்ள ஆவணம் ஆங்கிலத்தில் 'டூல்கிட்' (Toolkit) எனப்படுகிறது.
போராட்டங்கள் நடத்தும்போதும் அதில் பங்கேற்பவர்கள் செய்யவேண்டிவை குறித்து 'டூல்கிட்' உருவாக்கப்பட்டு பகிரப்படுவதும் வழக்கம்.
தாம் அந்த டூல்கிட்டை உருவாக்கவில்லை என்றும் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க மட்டுமே விரும்பியதாகவும் திஷா ரவி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பிப்ரவரி 3ஆம் தேதி அன்று அதில் இரு வரிகளை திருத்தம் மட்டுமே செய்தேன் என்றும் அவர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
திஷா ரவி கிரேட்டா துன்பர்க்கின் 'Fridays for Future' பருவநிலை போராட்டத்தின் இந்திய நிறுவனர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எழும் கேள்விகள்
திஷா ரவியின் கைது குறித்து பேசிய மூத்த வழக்குரைஞர் ரெபெக்கா ஜான்
"டெல்லியின் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தின் பொறுப்பு குற்றவியல் நடுவரின் செயல்பாடுகள் மிகவும் ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது. இவர்தான், திஷா ரவி தரப்பில் வழக்குரைஞர் இருக்கிறாரா இல்லையா என்று கூட உறுதி செய்யாமல், ஒரு இளம் பெண்ணை காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் ஐந்து நாட்கள் வைத்து விசாரிக்க பிடியாணைக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்.
குற்றவியல் நடுவர்கள் இதுபோன்ற விடயங்களில் கவனமாக இருப்பதுடன், இந்திய அரசியலைமைப்புச் சட்டப் பிரிவு 22, முழுமையாக கடைபிடிக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
குற்றம்சாட்டப்பட்ட திஷா ரவி சார்பாக வழக்குரைஞர்கள் யாரும் வரவில்லை என்றால், அவர் சார்பாக வழக்குரைஞர் வரும் வரை குற்றவியல் நடுவர் காத்திருக்க வேண்டும் அல்லது திஷா ரவிக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்திருக்க வேண்டும்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் முறையாக ஆராயப்பட்டதா? பெங்களூரு நீதிமன்றத்தில் இருந்து பிடியாணை மாற்ற உத்தரவு இல்லாமல், திஷா ரவி ஏன் டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் என குற்றவியல் நடுவர் சிறப்புப் பிரிவினரிடம் கேள்வி எழுப்பினாரா? இவை எல்லாமே குற்றவியல் நடுவர் தன் கடமையை முழுமையாகச் செய்யவில்லை என்பதைக் காட்டுகிறது" என்று கூறியுள்ளார்.
கிரேட்டா துன்பர்க் டூல்கிட்டில் என்ன இருந்தது?
இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகப் பாப் பாடகி ரிஹானா ட்விட்டரில் பதிவிட்ட பின்பு சுவீடனைச் சேர்ந்த மாணவியும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான செயலாளருமான கிரேட்டா துன்பர்க் தமது ட்விட்டர் பக்கத்தில் 'டூல்கிட்' ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
அந்த ட்விட்டர் பதிவில் இந்தியாவில் களத்தில் உள்ள மக்களால் இந்த டூல்கிட் புதுப்பிக்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதன் பின்பு அதை தமது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கி இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
பிப்ரவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பதிவுகள் மூலம் 'ட்விட்டர் புயல்' உருவாக்குவது, போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புகைப்படம் மற்றும் காணொளிகளை வெளியிடுவது ஆகியவை கிரேட்டா துன்பர்க் டூல்கிட்கிட்டில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதானி,அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு எதிராக செயல்படுவது, அரசு அதிகாரிகள் மற்றும் அரசை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்கு விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் கோரிக்கை வைப்பது, பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அவரவர் இருக்கும் இடத்துக்கு அருகில் உள்ள இந்தியத் தூதரகம், ஊடக நிறுவனம் அல்லது உள்ளூர் அரசு அலுவலகம் ஆகியவற்றின் அருகே போராட்டம் நடத்துவது உள்ளிட்டவையும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.
கிரேட்டா துன்பர்க் பதிவிட்டிருந்த டூல்கிட் இந்திய அரசுக்கு எதிராக செயல்பட விரும்பும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் சதி என்றும் கிரேட்டா தன்னுடைய பதிவு மூலம் காலிஸ்தான் பிரிவினைவாதத்தை தூண்டும் சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்றும் டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
கிரேட்டா துன்பர்க் மட்டுமல்லாது 'அடையாளம் அறியப்பட்டவர்கள்' மீதும் டெல்லி காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
திஷா ரவி மீது என்ன புகார்?
கிரேட்டா துன்பர்க் பகிர்ந்த டூல்கிட்டில் இருந்த, குற்ற நடவடிக்கை எடுக்கத் தகுந்த தகவல்கள் வெளியில் கசிந்ததால்தான் திஷா ரவி, அதை நீக்குமாறு கிரேட்டாவிடம் கூறினார் என்று டெல்லி காவல்துறை தெரிவிக்கிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
திஷா ரவி இந்த டூல்கிட்டை உருவாக்கியதில் முக்கிய சதியில் ஈடுபட்டவர் என்று தெரிவித்துள்ளது டெல்லி காவல்துறை. இது தொடர்பாக்த்தான் நேற்று திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளார்.
காலிஸ்தான் ஆதரவு 'பொயட்டிக் ஜஸ்டிஸ் ஃபவுண்டேஷன்' எனும் அமைப்புடன் இணைந்து இந்திய அரசுக்கு எதிரான வெறுப்புணர்வை பரப்பும் வகையில் திஷா செயல்பட்டார் என்று டெல்லி காவல்துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
திஷா ரவியை காவல்துறை தங்கள் காவலில் எடுத்து ஐந்து நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












