கொரோனா வைரஸ்: "டெல்லியில் அனைத்து திரையரங்குகள், பள்ளி கல்லூரிகள் மூடப்படும்" - அரவிந்த் கேஜ்ரிவால்

பட மூலாதாரம், Getty Images
டெல்லியில் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை அனைத்து சினிமா அரங்கங்களும் மூடப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்வுகள் நடைபெறாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக ஏற்கனவே கேரளாவில் திரையரங்குகள் மூடப்படும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது டெல்லியிலும் திரையரங்குகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே "அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல மாட்டார்கள். இந்தியர்கள் அனைவரும் அவசியமில்லாத பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்,"
"இந்த கொரோனா தொற்று பரவலை நம்மால் தடுக்க முடியும். மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்த்து அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யலாம்,"
"கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று சூழலால் இந்திய அரசு முழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அனைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் மாநிலங்கள் முழுவதும் எடுக்கப்பட்டு வருகின்றன.
விசாக்கள் நிறுத்தி வைப்பு முதல் சுகாதார சேவைகளை அதிகப்படுத்துவது வரை என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன," என பிரதமர் நரேந்திர மோதி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
73 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் முதல் முறையாக இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புனேவில் 8 பேருக்கு, நாக்பூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில் மகாராஷ்டிராவில் மொத்தம் 11 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மகாராஷ்டிராவில் 18 பயணிகள் புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 15 பேர் மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மும்பை மற்றும் புனேவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சில நாட்களுக்கு முன்பு துபாய்க்குப் பயணம் மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவக்கூடியது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள நிலையில், இரானில் உள்ள இந்திய மாணவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைவதைத் தடுக்க இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை இரான் மேற்கொள்ளவுள்ளதா என்பது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்டிகோ அறிக்கை வெளியீடு
கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸால் விமானப் போக்குவரத்து தொடர்பாக ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இந்நிலையில், இந்திய விமான நிறுவனம் இன்டிகோ(Indigo) அறிக்கை வெளியிட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனா மற்றும் ஹாங்காங்கிற்கு செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. ரத்து செய்யப்பட்ட விமானங்களை வேறு சில இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டதால் பொருளாதார தாக்கம் ஏற்படவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
ஆனால் கடந்த சில நாட்களாக தினமும் செய்யப்படும் பதிவில் 15-20 சதவீதம் குறைந்துள்ளது. இந்நிலை வருங்காலத்தில் சூழலை பொருத்து மாறலாம்.
இதனால் காலாண்டு நிதி அறிக்கையில் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்று இன்டிகோ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பட மூலாதாரம், Getty Images

ரத்த மாதிரிகள்
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் இன்று நாடாளுமன்றத்தில் பேசுகையில், இத்தாலியில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் பல இந்திய குடிமக்களைப் பரிசோதிக்கத் தேவையான ரத்த மாதிரிகளை சேகரிக்க இந்தியாவிலிருந்து மருத்துவக் குழுவை இத்தாலிக்கு அனுப்பியுள்ளோம். மேலும் கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிறகு நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

முகமூடிகள் அணிவது பாதுகாப்பானதா?

பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: ஐரோப்பாவுடன் விமான சேவையை துண்டித்த அமெரிக்கா, விசா வழங்குவதை நிறுத்திய இந்தியா
- பிரிட்டன் காலத்தில் இந்தியாவில் திவாலான அர்பத்நாட் வங்கியின் கதை
- நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர் சந்திப்பு: புதிய கட்சி குறித்து அறிவிப்பா?
- "திருடா... திருடா": திரைப்பட பாணியில் விமான நிலையத்தில் நடந்த திருட்டு சம்பவம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:














