ரயில்வே வேலைக்கான தேர்வில் தமிழ் மொழியை தேர்வு செய்தோர் எத்தனை பேர்?

(கோப்புப்படம்)

பட மூலாதாரம், Hindustan Times/Getty images

படக்குறிப்பு, (கோப்புப்படம்)

ரயில்வே பணிகளுக்கான நேரடி தேர்வில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் தெலுங்கு மொழியை தங்கள் முதன்மை மொழியாக தேர்வு செய்கின்றனர்.

இந்திய ரயில்வே பணிகளுக்கான நேரடி தேர்வில் எத்தனை பேர் தங்கள் மொழியை பயன்படுத்துகின்றனர் என மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர், சுரேஷ் அங்காடி, 2017ஆம் ஆண்டிலிருந்து 47.18 லட்சம் தேர்வர்கள் 13 மாநில மொழிகளை பயன்படுத்தியதாக பதிலளித்துள்ளார்.

ஹிந்தி, ஆங்கிலம் உட்பட 13 மொழிகளை தேர்வர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல் பொதுத்துறை போட்டி தேர்வுகளிலும் மாநில மொழிகளை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

மொழிவாரியாக தேர்வு எழுதியோர் எண்ணிக்கை . .  .

தெலுங்கு மொழியைத் தவிர மராட்டி, வங்காளம், தமிழ் மற்றும் மலையாளம்தான் அதிகப்படியாக பயன்படுத்தப்பட்ட மாநில மொழிகள் ஆகும்.

2018ஆம் ஆண்டு மட்டும் 9,89,818 தேர்வர்கள் தெலுங்கில் தங்களின் தேர்வை எழுதினர். 8,42,298 பேர் மராட்டியை முதன்மை மொழியாக தேர்வு செய்தனர்.

தேர்வு

பட மூலாதாரம், Getty Images

அசாமி மற்றும் குஜராத்தி ஆகிய மொழிகளிலும் கணிசமானோர் தங்கள் தேர்வுகளை எழுதுகின்றனர்

எந்தெந்த மொழியில் எத்தனை பேர் தேர்வு எழுதுகின்றனர்

  • 2017ஆம் ஆண்டிலிருந்து 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தமிழ் மொழியில் ரயில்வே தேர்வை எழுதியுள்ளனர்.
  • 2017ஆம் ஆண்டிலிருந்து 3 லட்சத்துக்கும் அதிகமானோர் குஜராத்தியில் ரயில்வே தேர்வை எழுதியுள்ளனர்.
  • 2017ஆம் ஆண்டிலிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பஞ்சாபி மொழியில் தங்களை தேர்வை எழுதியுள்ளனர்.
  • 2017ஆம் ஆண்டிலிருந்து 8 லட்சத்துக்கும் அதிகமானோர் மராட்டி மொழியில் தங்கள் தேர்வை எழுதியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: