டி இமான்: பார்வையற்ற கிருஷ்ணகிரி இளைஞருக்கு பாட வாய்ப்பளித்த இசையமைப்பாளர் - நம்பிக்கை பகிர்வு

பட மூலாதாரம், facebook/ImmanOfficial
ஃபேஸ்புக் பதிவு ஒன்று பார்வையற்ற இளைஞருக்குத் திரைப்படத்தில் பாட வாய்ப்பு வாங்கி தந்திருக்கிறது.
தீ. அஜித் மதன் என்பவர் நேற்று (சனிக்கிழமை) ஒரு காணொளியை ஃபேஸ்புக்கில் பகிர்கிறார்.
அந்த காணொளியில் பார்வையற்ற இளைஞர் விஸ்வாசம் திரைப்படத்தில் டி இமான் இசையமைப்பில் சித் ஸ்ரீராம் பாடிய கண்ணான கண்ணே பாடலை பாடுகிறார்.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
இந்த பாடலை பாடுபவர் கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டி எனும் கிராமத்தில் பிறந்த செல்வன் திருமூர்த்தி என்றும், பார்வையற்றவரான இவர் சிறுவயதிலேயே தன் தாயை இழந்தவர் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த காணொளியை ஏறத்தாழ 288, 273 பேர் பார்க்கிறார்கள், 802 பேர் ஷேர் செய்கிறார்கள். இதில் இசையமைப்பாளர் டி.இமானும் ஒருவர்.
மேலும் டி.இமான், இந்த பாடலை பாடியவர் குறித்த விவரங்களைக் கேட்டு இருந்தார்.
பின், அந்த இளைஞர் குறித்த தகவல்கள் கிடைத்ததாகவும், அவருடன் பேசியதாகவும், திருமூர்த்திக்கு அடுத்த படத்தில் வாய்ப்பளிப்பதாகவும் தனது ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், facebook/ImmanOfficial
ஒரு ஃபேஸ்புக் பதிவு ஒரு நபரின் வாழ்க்கையையே மாற்றி உள்ளது.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1

பாலிவுட்
கடந்த மாதமும் இது போல ஒரு நிகழ்வு பாலிவுட்டில் நடந்தது.

பட மூலாதாரம், Facebook
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரேணு என்ற பெண் ரயில்வே நிலையத்தில் நின்று, பாலிவுட்டில் பிரபல பாடகியான லதா மங்கேஷ்கரின் பிரபல பாடலான 'ஏக் பியார் நக்மாஅ ஹோய் ' என்ற பாடலை பாடினார். இதைக் கேட்ட மக்கள் இவரது பாடலை ரசித்து அதை வீடியோவாக பதிவிட்டு இணையதளத்தில் வெளியிட்டனர். இது வைரலானது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2
ரேணு மண்டலின் குரலைக் கேட்ட பாலிவுட் இசையமைப்பாளரும் நடிகருமான ஹிமேஷ் ரேஷ்மியா தனது அடுத்த படமான 'ஹேப்பி ஹர்டி அண்ட் ஹீர்' என்ற படத்தில் ரேணு மண்டலுக்கு வாய்ப்பளித்தார்.

பாக்யராஜ் சொன்ன அந்த ஒரு வார்த்தை: ஒத்த செருப்பு
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 3

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்