65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன்? - கல்லூரி மாணவி

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: "தலைமை ஆசிரியர் - கல்லூரி மாணவி காதல்"

"தலைமை ஆசிரியர் - கல்லூரி மாணவி காதல்"

பட மூலாதாரம், தினத்தந்தி

65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன்? என்பது குறித்து கல்லூரி மாணவி மகத் போலீசாரிடம் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ்.

"காதலுக்கு வயது இல்லை என்று கூறுவது போல் அமைந்துவிட்டது ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன் (வயது 65), சட்டக்கல்லூரி மாணவி மகத் (20) ஆகியோர் காதல். ஆசிரியர்-மாணவி என்ற உறவை கடந்து கிட்டத்தட்ட 45 வயது வித்தியாசத்தை கொண்டது இந்த முரண்பட்ட காதல். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர்களது காதல் பயணம் சொந்த மாநிலத்தில் தொடங்கி இருந்தாலும் அவர்களை வெளி உலகுக்கு கொண்டு வந்தது ராமேசுவரம்தான்.

தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன் மாயமான தன் மகள் மகத்தை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு அவருடைய தந்தை கோர்ட்டை நாடினார். அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த கோர்ட்டு, இன்னும் 72 மணி நேரத்தில் மாணவியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்தது.

அதன் பின்னரே உஷாரான பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி, ராமேசுவரம் போலீசார் உதவியுடன் மகத்தையும், அவருடைய 65 வயது காதல் கணவர் ஜெய்கிருஷ்ணனையும் கண்டுபிடித்து அழைத்துச் சென்றனர்.

இதில் இன்னொரு தகவல் என்னவென்றால் பஞ்சாப் போலீசாருடன் மகத்தின் தந்தையும் வந்து மகளை உடன் வருமாறு அழைத்ததற்கு மகத் கூறிய சில பதில்கள் போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்தது.

"வாழ்ந்தால் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன்தான் வாழ்வேன். என் கணவரை என்னைவிட்டு பிரித்துவிடாதீர்கள்" என கதறி அழுது கெஞ்சி இருக்கிறார். பொருந்தாத இந்த காதல் பற்றி பஞ்சாப் மற்றும் ராமேசுவரம் போலீசார் எடுத்துக்கூறியும் அதை மகத் பொருட்டாகவே கருதவில்லை.

3 மகன்கள், ஒரு மகளுக்கு தந்தையான ஜெய்கிருஷ்ணனிடமும் போலீசார் பேசிப்பார்த்தனர். அவரின் மகள் வயதுடைய மகத்தை விட்டு விலகி விடுமாறு போலீசார் கேட்ட போது அவரும் பிரிய மறுத்திருக்கிறார்" என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

Presentational grey line
தினகரன்

பட மூலாதாரம், இந்து தமிழ்

Presentational grey line

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "மழைக்கு நன்றி: அதிகரித்த விவசாய பரப்பு'

"மழைக்கு நன்றி: அதிகரித்த விவசாய பரப்பு'

பட மூலாதாரம், Getty Images

மழையின் காரணமாக தமிழ்நாட்டில் இந்தாண்டு நெல் நடவு செய்யும் பரப்பு அதிக்கரித்துள்ளதாக கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி. சென்ற ஆண்டு 2.895 லட்சம் பரப்பில் நெல் சாகுபடி நடைப்பெற்றது என்றும், இந்தாண்டு அந்த பரப்பு 5.432 லட்சம் பரப்பாக அதிகரித்துள்ளது. திருவாரூரில் 1.70 லட்சம் ஹெக்டேர் பரப்பிலும், தஞ்சாவூரில் 55 ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலும், நாகையில் 81 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது என்றும் அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

Presentational grey line
Presentational grey line

இந்து தமிழ்: '5 பேரை காப்பாற்றிய பெண் போலீஸ்'

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயன்றவர்களை பெண் போலீஸ் கோமதி தடுத்து நிறுத்தி காப்பாற்றினார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"சென்னை கடற்கரை ராஜாஜி சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் போலீஸாகப் பணிபுரியும் கோமதி, நேற்று முன்தினம் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்புப் பணிக்கு நின்றிருந்தார்.

அப்போது எண்ணூரைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளோடு அங்கு வந்தார். அவர் திடீரென தான் மறைத்து வைத் திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தனது உடலில் ஊற்றியதுடன் மனைவி, குழந்தைகள் உடலிலும் ஊற்றி, தீக்குளிக்க முயன்றார்.

இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் கோமதி வேகமாகச் சென்று தீப்பெட்டியையும், மண்ணெண்ணெய் கேனையும் பறித்தார். மேலும் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவர்கள் உடலில் தண்ணீர் ஊற்றினர். கோமதி விரைவாக செயல்பட்டதால் தீ வைப்பதற்கு முன்பாகவே அதைத் தடுத்து நிறுத்தி விட்டார். இதனால் 5 பேரின் உயிர்கள் காப்பற்றப்பட்டன.

கோமதியின் செயலை அறிந்த உயர் அதிகாரிகள் அவரை காவல் ஆணையர் அலுவலகம் வரவழைத்து வெகுவாகப் பாராட்டியுள்ளனர்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

Presentational grey line

தினமணி: "டைம்ஸ் தரவரிசை- 200 ரேங்குக்குள் இடம் பிடிக்காத இந்தியக் கல்வி நிறுவனங்கள்"

டைம்ஸ் உலக பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் வழக்கம்போல இந்த ஆண்டும் முதல் 200 ரேங்குகளுக்குள் இந்தியக் கல்வி நிறுவனங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"தரவரிசையில் மும்பை ஐஐடி கடந்த ஆண்டைக் காட்டிலும் இம்முறை பின்னடைவைச் சந்தித்துள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

தமிழகத்தைச் சேர்ந்த பல தனியார் பல்கலைக்கழகங்கள் இந்த தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இடம்பெறவில்லை.

ஆராய்ச்சிக்கான முக்கியத்துவம், ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியீடு, அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றின் அடிப்படையில் உலக அளவில் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலை மாணவர்களின் நலன் கருதி பல்வேறு அமைப்புகள் வெளியிட்டு வருகின்றன. அதுபோல, 2019-ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் உலக தலைசிறந்த கல்விநிறுவனங்கள் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

இதில் பிரிட்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், மசாச்செட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்.ஐ.டி.), கலிபோர்னியா தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :