விளம்பரங்களுக்கு ரூ.4,880 கோடி செலவிட்ட இந்திய அரசு
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: 'விளம்பரங்களுக்கு ரூ.4,880 கோடி செலவு'

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2014-18ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் விளம்பரங்களுக்காக மத்திய அரசு ரூ.4,880 கோடி செலவிட்டுள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் எழுத்துப்பூர்வமாக அளித்திருக்கும் பதிலில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விவரிக்கும் அந்த செய்தி, "எலெக்ட்ரானிக், அச்சு மற்றும் பிற ஊடகங்கள் வாயிலாக கடந்த 2014-18ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அளிக்கப்பட்ட விளம்பரங்களுக்கு மத்திய அரசு ரூ.4,880 கோடி செலவிட்டுள்ளது. இதில் 2014-15ஆம் ஆண்டில் ரூ.979.78 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2015-16ஆம் ஆண்டில் ரூ.1,160.16 கோடியும், 2016-17ஆம் ஆண்டில் 1,264 கோடியும், 2017-18ஆம் ஆண்டில் ரூ.1,313 கோடியும், 2018-19ஆம் நிதியாண்டில் இதுவரையில் ரூ.162.83 கோடியும் விளம்பரங்களுக்காக அரசு செலவிட்டுள்ளது.
அச்சு விளம்பரங்களுக்கு ரூ.2,128.33 கோடியும், ஒலி மற்றும் ஒளிபரப்பு ஊடக விளம்பரங்களுக்கு ரூ.2,131 கோடியும், பிற விளம்பரங்களுக்கு ரூ.620.70 கோடியும் செலவிடப்பட்டுள்ளது என்று ரத்தோர் குறிப்பிட்டுள்ளார்." என்கிறது அச்செய்தி.

இந்து தமிழ்: "தமிழகத்தில் ஊழல் தீர்க்க முடியாத நோய்'

பட மூலாதாரம், இந்து தமிழ்

தினமலர்: 'உயர் கல்வி சேர்க்கையில் தமிழகத்திற்கு 2 ஆம் இடம்'
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய உயர் கல்வி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வில், மாணவர் சேர்க்கையில் தமிழகம் தேசிய அளவில் இரணடாம் இடம் பெற்றுள்ளது என்கிறது தினமலர் செய்தி. நாட்டில் அதிக எண்ணிக்கையில் கல்லூரிகள் செயல்படும் எட்டு மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'முதல்வர் வாகன தொடரை பின் தொடர்ந்த 4 பேர் கைது'
முன்னள் முதலவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருக்கும் காவேரி மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைய, விமான நிலையத்திலிருந்து முதல்வர் பழனிசாமியின் வாகன தொடரை பின் தொடர்ந்துவந்த நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












