சட்டப்பேரவை இடைத்தேர்தல்: பின்னடைவை சந்தித்த பா.ஜ.க

பட மூலாதாரம், Getty Images
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 10 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான முடிவுகள், ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா, மேகாலயா, பிகார், ஜார்கண்ட், உத்திரபிரதேசம் உள்ளிட்ட 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதே போன்று, நாகாலாந்து, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் காலியாக இருந்த 4 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளையும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை பொறுத்தவரை, பிகார் மாநிலம் ஜோகிஹட் தொகுதியில், ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது. மேகாலயாவின் அம்பட்டி தொகுதியில், காங்கிரஸ் கட்சியும், மேற்கு வங்கத்தில் மஹேஷ்தலா தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இதனிடையே, கர்நாடகா மாநிலம் ஆர்.ஆர். நகரில் பாஜக வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றது.
உத்தரகாண்ட் மாநிலம் தாராலியில் மட்டும் சுமார் 1900 வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க வெற்றி பெற்றது.
10 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெற்றது, அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கைரானா மக்களவை தொகுதியில், ராஷ்டிரிய லோக் தள கட்சியின் வேட்பாளர் தபசூ ஹசன் வெற்றி பெற்றார். சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ராஷ்டிரிய லோக் தளம் வெற்றியை கைப்பற்றியது.
மகாராஷ்டிர மாநிலம் பன்டாரா கோண்டியா மக்களவை தொகுதியில் தோல்வியை தழுவிய பா.ஜ.க, அதே மாநிலத்தில் பால்கர் தொகுதியில் வெற்றி பெற்றது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












