கார் விபத்தில் உயிர் தப்பிய மோதி மனைவி- மற்றொருவர் பலி

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் பிரிந்து வாழும் மனைவி ஜசோதாபென் புதன்கிழமை நெடுஞ்சாலையில் நடந்த ஒரு அபாயகரமான கார் விபத்தில் சிக்கினார் என்பதை காவல் துறையினர் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கார்விபத்தில் சிக்கிய மோடி மனைவி

பட மூலாதாரம், Getty Images

ராஜஸ்தானில் அவர் சென்ற வாகனம் ஒரு சரக்கு லாரியுடன் மோதியதில் ஜசோதா பெண்ணுடன் பயணித்த அவரது உறவினர் ஒருவர் இறந்தார்.

ஜசோதாபென், அவரது பாதுகாவலர் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் சிறு காயங்களால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சென்ற எஸ் யு வி காரில் ஏழு பேர் பயணித்திருந்தனர் .

இந்த விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையை துவக்கியிருப்பதாக காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

ஜசோதாபென்னுக்கும் மோதிக்கும் 1967ல் திருமணம் நடந்தது. அப்போது மோதிக்கு வயது 17. ஆனால், மோதி அவருடன் இணைந்து வாழவில்லை.

Narendra Modi wife Travelled in car that collided with truck

மூன்று வருடங்களுக்கு பின்னர் மோதி பிரிந்துவிட்டதாக அவரது மனைவி நேர்காணல்களில் தெரிவித்திருந்தார். 2014 மக்களவைத் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கலின் போதுதான் முதன்முறையாக வெளிப்படையாக மோதி தனக்கு திருமணமானதை ஒப்புக்கொண்டார்.

பிரம்மச்சரியத்தை கொண்டாடும் இந்து தேசியவாத அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கில் சேர்ந்தபிறகே மோதி தனது மனைவியை கைவிட்டுச் சென்றார் என விமர்சகர்கள் மோதியை குற்றம்சாட்டினர்.

தனது மனைவியை வெளிப்படையாக அடையாளப்படுத்த நீண்டகாலமாக மோதி மறுத்தது பெண்கள் மீதான அவரது அணுகுமுறையை காட்டுகிறது என விமர்சகர்கள் கூறிவந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :