நச்சுப் புகையால் ஸ்தம்பித்த டெல்லி (புகைப்படத் தொகுப்பு)

இந்திய தலைநகர் டெல்லியில் நச்சுப்புகையின் தீவிரம் அதிகரித்துள்ளது. அதுகுறித்த புகைப்படத் தொகுப்பு.

டெல்லியின் பிரபல சுற்றுலா தலமான ஜாமா மஸ்ஜித் நச்சுப் புகையால் சூழப்பட்ட காட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லியின் பிரபல சுற்றுலா தலமான ஜாமா மஸ்ஜித் நச்சுப் புகையால் சூழப்பட்ட காட்சி
டெல்லியின் சில பகுதிகளில் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்திருந்த அளவைவிட 30 மடங்கு அதிக காற்று மாசுபாடு நிலவியது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லியின் சில பகுதிகளில் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்திருந்த அளவைவிட 30 மடங்கு அதிக காற்று மாசுபாடு நிலவியது.
நச்சுப் புகை காரணமாக எதிரில் வரும் மனிதர்களையும் வாகனங்களையும் கூடத் தெளிவாகப் பார்க்க முடியாத சூழல் நிலவியது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நச்சுப் புகை காரணமாக எதிரில் வரும் மனிதர்களையும் வாகனங்களையும் கூடத் தெளிவாகப் பார்க்க முடியாத சூழல் நிலவியது
டெல்லியில் நச்சுப் புகையால் 'சுகாதார ரீதியான அவசர நிலை' நிலவுவதாகக் இந்திய மருத்துவக் கழகம் கூறியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லியில் நச்சுப் புகையால் 'சுகாதார ரீதியான அவசர நிலை' நிலவுவதாகக் இந்திய மருத்துவக் கழகம் கூறியுள்ளது
இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு அரசை இந்திய மருத்துவக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு அரசை இந்திய மருத்துவக் கழகம் வலியுறுத்தியுள்ளது
மாசுப் பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்தும் வகையிலான புகைப்படங்களை டெல்லி மக்கள் சமுக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாசுப் பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்தும் வகையிலான புகைப்படங்களை டெல்லி மக்கள் சமுக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்
நவம்பர் 19 அன்று டெல்லியில் நடைபெறவுள்ள , பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்க வாய்ப்புள்ள மாரத்தான் போட்டியையும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவக் கழகம் கூறியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நவம்பர் 19 அன்று டெல்லியில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்க வாய்ப்புள்ள மாரத்தான் போட்டியை ரத்து செய்யப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவக் கழகம் கூறியுள்ளது
நுரையீரலுக்குள் செல்லக்கூடிய அளவுக்கு மிக மிகச் சிறியதாக இருக்கும் நுண்துகள்களின் அளவு டெல்லியின் சில இடங்களில் ஒரு சதுர மீட்டருக்கு 700 மைக்ரோகிராம் வரை உள்ளது: 'சிஸ்டம் ஆஃப் ஏர் குவாலிட்டி வெதர் ஃபோர்காஸ்டிங் அண்ட் ரிசர்ச்'

பட மூலாதாரம், Getty Images

தங்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதை பலரும் சமூக வளைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தங்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதை பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்
டெல்லிக்கு அண்மையில் அமைந்துள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள விவசாயிகள் சுள்ளிகளையும், கூளங்களையும் எரிப்பதால் குளிர் காலங்களில் டெல்லியின் காற்று மாசுபாடு அளவு அதிகரிக்கும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லிக்கு அண்மையில் அமைந்துள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள விவசாயிகள் சுள்ளிகளையும், கூளங்களையும் எரிப்பதால் குளிர் காலங்களில் டெல்லியின் காற்று மாசுபாடு அளவு அதிகரிக்கும்
பல ஆண்டுகளாக டெல்லியின் மாசுபாடு அளவு அபாயகரமான அளவில் அதிகரித்து வந்தாலும், இந்தப் நடைமுறையை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் பெரிதாக ஒன்றும் மேற்கொள்ளப்படவில்லை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல ஆண்டுகளாக டெல்லியின் மாசுபாடு அளவு அபாயகரமான அளவில் அதிகரித்து வந்தாலும், இந்தப் நடைமுறையை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் பெரிதாக மேற்கொள்ளப்படவில்லை
புதுடெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, புதுடெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :