பாலியல் தாக்குதலுக்காக சிறையிலடைக்கப்பட்ட ஹரியானா சாமியாரின் ஆடம்பரத் தலைமையகத்தின் உள்ளே...

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய சாமியார் குர்மித் ராம் ரஹீம் சிங்கிற்கு சொந்தமான, விசித்திர கதையில் வருவது போன்ற பெரிய எஸ்டேட்டின் உள்ளே காணப்படுபவை பற்றிய புகைப்படத் தொகுப்பு

"தேரா சச்சா செளதா" ஆசரமத்திற்கு வரவேற்பு வளைவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மில்லியன் கணக்கான சீடர்களை கொண்டிருப்பதாக கூறுகின்ற "தேரா சச்சா செளதா" பிரிவின் தலைமையகத்திற்கு வருவோரை வரவேற்கும் பல அலங்கார வளைவுகளில் இதுதான் முதல் அலங்கார வளைவு. இந்தியாவின் வட பகுதியில் அமைந்திருக்கும் ஹரியானா மாநிலத்திலுள்ள சிர்சாவில் சுமார் ஆயிரம் ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரிவின் தலைமையகத்திற்கு இந்த சாலை வழிகாட்டுகிறது.
பிரபல கட்டடங்களின் மாதிரி கட்டப்பட்டுள்ள மாளிகைகள்

பட மூலாதாரம், Manoj Dhaka

படக்குறிப்பு, ‘மேஜிக் ஷைனிங் கிராண்ட்‘ அல்லது எம்எஸ்ஜி ரிசார்ட். இந்த ரிசார்ட்டில், ஈபிள் கோபுரம் அல்லது தாஜ்மஹால், தனியார் குளங்கள், 3 உணவகங்கள் மற்றும் ஒரு ஸ்பா போன்ற பிரபல கட்டட மாதிரியிலான மாளிகைகள் கட்டப்பட்டுள்ளன. மகிழ்ச்சியளிக்கும் எம்எஸ்ஜி ரிசார்ட் 5 நட்சத்திர வசதிகளை வழங்குகின்றன என்றும், முதல் பார்வையிலேயே அனைவரின் கவனத்தை ஈர்க்கின்ற புதுப்பாணியிலான உள் அலங்காரங்களை கொண்டுள்ளன என்றும் அதனுடைய இணையதளம் பெருமையுடன் தெரிவிக்கிறது.
மின்சார கார்

பட மூலாதாரம், Manoj Dhaka

படக்குறிப்பு, லிம்மி என் திம்மி, சார்சன் மற்றும் ராஜ்வாடெ தாட் என்ற பெயருடைய மூன்று உணவகங்களுக்கு செல்வதற்கு பயன்படுத்தக்கூடிய ‘மேஜிக் ஷைனிங் கிராண்ட்‘ ரிசார்டின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டுள்ள படகு வடிவ மின்சார கார்.
எம்எஸ்ஜி குளோரியஸ் சாவதேச பள்ளி

பட மூலாதாரம், Manoj Dhaka

படக்குறிப்பு, சிர்சாவிலுள்ள "தேரா சச்சா செளதா" பிரிவின் வளாகத்திற்கு உள்ளே இருக்கும் எம்எஸ்ஜி குளோரியஸ் சாவதேச பள்ளியின் நுழைவாயில். “ எந்த குழந்தையையும் விட்டுவிடாமை” என்பதே இந்தப் பள்ளியின் நோக்கமாகும். இந்தப் பள்ளியின் நிறுவனர் குர்மித் ராம் ரஹீம் சிங்கை ” உத்வேகம் அளிப்பவர்” என்று குறிப்பிடும் இந்தப் பள்ளியின் இணையதளம், இதனை தொடங்கிய தாராள செயலுக்காக, இதயப்பூர்வ மரியாதையை ஊழியர்கள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கிறது.
சிங் மாளிகையின் குகை போன்ற நுழைவாயில்

பட மூலாதாரம், Manoj Dhaka

படக்குறிப்பு, பல பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் அல்லது பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் “குஃபா” அல்லது குகை இருக்கின்ற குர்மித் ராம் ரஹீம் சிங் மாளிகையின் நுழைவாயில். இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு ஆகஸ்ட் மாதம் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
விளையாட்டு கிராமம்

பட மூலாதாரம், Manoj Dhaka

படக்குறிப்பு, “விளையாட்டு கிராமத்தை“ நாட்டுக்கு “உயர் மதிப்பு மிகுந்த பரிசு” என்று குர்மித் ராம் ரஹீம் சிங்கின் இணையதளம் விவரிக்கிறது. தன்னை ஆல்-ரவுண்டர் விளையாட்டு வீரர் என்று கூறிக்கொள்ளும் ராம் ரஹீம் சிங், யோகாவிலும், பனி ஹாக்கி விளையாட்டுகளில் இந்தியாவுக்கு வெற்றிகளை கொண்டு வந்தோருக்கு பயிற்சி அளித்தவர் என்று கூறப்படுகிறது. அதிகபட்ச ஒலிம்பிக் பதக்கங்களை வெல்வதே இந்த விளையாட்டு வளாகத்தின் நோக்கமாகும்.
"தேரா சச்சா செளதா" பிரிவை வழிநடத்திய தலைவர்கள்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, (இடமிருந்து வலமாக) "தேரா சச்சா செளதா" பிரிவை நிறுவிய ஷெஹான்ஷா மஸ்தானா, அதனுடைய இரண்டாவது “மாஸ்டர்” மற்றும் “மிகவும் மதிப்பளிக்கப்படும் தந்தை” ஷா சாட்நாம் சிங் மற்றும் ”தற்போதைய மாஸ்டர்” மற்றும் “மிகவும் மதிப்பளிக்கப்படும் தந்தை” தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள குர்மித் ராம் ரஹீம் சிங்.