முஸ்லிம்களின் `முத்தலாக்` விவாகரத்து முறை சட்ட விரோதமானது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பட மூலாதாரம், Getty Images
முஸ்லிம்களின் விவாகரத்து வழக்கமான முத்தலாக் முறை, அரசியலைப்புக்கு எதிரானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ் கேஹர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
மேலும் அடுத்த ஆறு மாத காலத்திற்குள் முத்தலாக் முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில், தலைமை நீதிபதி ஜெ.எஸ் கேஹர் மற்றும் நீதிபதி அப்துல் நசீர் ஆகியோர் முத்தலாக் முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமை என தீர்ப்பு வழங்கினர்.
ஆனால் நீதிபதிகள் உதய் லலித், ரோஹிண்டன் நரிமன் மற்றும் ஜோசப் குரியன் ஆகியோர் முத்தலாக் முறை இந்திய அரசியலைப்புக்கு எதிரானது என தீர்ப்பளித்தனர்.
எனவே பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், முத்தலாக் முறை சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முத்தலாக்கிற்கு எதிரான இந்த வழக்கானது முத்தலாக் முறையினால் விவாகரத்து அளிக்கப்பட்ட ஐந்து பெண்கள் மற்றும் இரண்டு பெண்ணுரிமை அமைப்புகள் மூலம் தொடரப்பட்டது.
பெண்ணுரிமை அமைப்புகள் முத்தலாக் முறை நடைமுறைக்கு எதிரானது என வாதிட்டு வந்தன.
ஆனால் தங்கள் மத வழக்கங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என முஸ்லிம் அமைப்புகள் மற்றும் முஸ்லிம் மதக்குருக்கள் தெரிவித்திருந்தனர்.
இந்தியாவில் 155 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய சிறுபான்மை இனமாக முஸ்லிம் சமுதாய மக்கள் உள்ளனர்.
இதையும் படிக்கலாம்:
- தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று ஆளுநரிடம் முறையிட முடிவு
- சிவனின் அர்த்தநாரீஸ்வரர் ரூபம் பாகிஸ்தானில் விரும்பப்படுகிறதா?
- பார்சிலோனா தாக்குதல்: சந்தேக நபர் சுட்டுக்கொலை
- கழிப்பறை கட்டித்தராத கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண்
- கிரிக்கெட்: இந்தியாவின் அபார வெற்றிக்கு 5 முக்கிய காரணங்கள்
- 72 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க போர் கப்பல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












