சக வீரரின் தவறால் பதக்கம் இழக்கும் உசைன் போல்ட்
தனது நாட்டு சக வீரரான நெஸ்ட்டா கார்ட்டர் தடை செய்யப்பட்ட ஒரு பொருளை பயன்படுத்தியுள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதால், தனது 9 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களில் ஒன்றை ஜமைக்காவின் தடகள வீரர் உசைன் போல்ட் திருப்பியளிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2008-ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஜமைக்காவின் ஆண்கள் 4 X 100 மீட்டர் ரிலே ஓட்டப்பந்தய அணியில் கார்ட்டர் இடம்பெற்றார்.

பட மூலாதாரம், EPA
கடந்த ஆண்டு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) மறுபடியும் சோதனை செய்த 454 ஊக்க மருந்து மாதிரி சோதனைகளில் கார்ட்டரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியும் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட பொருளான மெத்தில் ஹெக்ஸா நெமினேன் என்ற வேதி பொருளை அவர் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.
கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற அணியிலும் 31 வயதான கார்ட்டர் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












