உலகளவில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
உலகளவில் காடுகளில் வாழ்ந்துவரும் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty
பல தசாப்தங்களாக இந்த எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில், இப்போது அவை அதிகரித்துள்ளன என்று அவர்கள் கூறுகின்றனர்.
இயற்கை பாதுகாப்புக்கான உலக நிதியம் மற்றும், சர்வதேச புலிகள் அமைப்பு ஆகியவை இப்போது உலகளவில் 3900 புலிகள் வாழ்ந்துவருவதாக கணக்கிட்டு தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆறு ஆண்டுகளில் இருந்த அளவைவிட இப்போது காடுகளில் வாழும் புலிகளின் எண்ணிக்கை 700 உயர்ந்துள்ளன்.
இந்தியா, ரஷ்யா, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன என அந்த அமைப்புகளின் கணக்கீடுகள் கூறுகின்றன.
எனினும் எதிர்வரும் 2020ஆம் ஆண்டுவாக்கில் இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என அந்த ஆர்வலர்கள் விழைகின்றனர்.
வேட்டையாடப்படுதல், வாழ்விடம் குறைந்தது, உடல் பாகங்களுக்காக சட்டவிரோதமாக கொலை செய்யப்படுவது போன்ற காரணங்களால் உலகளவில் புலிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்துவந்துள்ளது.








