ஆப்கான் அமைதிப்பேச்சு இஸ்லாமாபாத்தில் தொடங்கியது
ஆப்கானிஸ்தானில் அமைதிப் பேச்சுக்களை எப்படி முன்னெடுப்பது என்பது தொடர்பிலான கூட்டம் இஸ்லாமாபாத்தில் தொடங்கியுள்ளது.

பட மூலாதாரம், AP
கடந்த ஒரு மாதத்தில் இது குறித்த மூன்றாவது கூட்டம் இது. எனினும் இந்தக் கூட்டத்தில் தாலிபான் தரப்பு பங்கேற்கவில்லை.
இக்கூட்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவை பங்குபெறுகின்றன.
இந்தப் பேச்சுக்களில் ஒரு முடிவு ஏற்படவேண்டும் என்பதை தாங்கள் பெரிதும் எதிர்பார்த்திருப்பதாக ஆப்கானிஸ்தான் அரசின் தலைமை செயல் அதிகாரியாக டாக்டர் அப்துல்லா அப்துல்லா கூறியுள்ளார்.
பாகிஸ்தானியத் தலைநகரில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு தாலிபான் குழுக்களின் பிரதிநிதிகள் பங்கேற்க வலியுறுத்தப்பட வேண்டும் என பாகிஸ்தானிய வெளியுறவுத்துறையின் ஆலோசகர் சத்ராஜ் அஜீஸ் கூறுகிறார்.
தாலிபான்கள் தற்போது மிகப்பெரிய அளவிலான தாக்குதல்களை முன்னெடுத்துவரும் வேளையில் இந்தப் பேச்சுக்கள் தொடங்கியுள்ளன.








