ஆஃப்கானில் சமாதானத்திற்கான செயற்திட்டம்
ஆப்கானிஸ்தானில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான செயற்திட்டம் ஒன்றிற்கு, தாம் இணங்கியுள்ளதாக பாகிஸ்தானில் சந்தித்து பேசி வரும் நான்கு நாடுகளின் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், b
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிகளுக்கிடையே, இந்த பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.
இது, ஒரே மாதத்தில் இடம்பெற்ற மூன்றாவது சந்திப்பாகும். மற்றொரு சந்திப்பு, இந்த மாதத்தின் பிற்பகுதியில் இடம்பெற உள்ளது.
தாலிபான்களையும் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்குமாறு அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டுவரும் தாலிபான்கள், கடந்த திங்கட்கிழமை தலைநகர் காபுலில் மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், 20 க்கும் அதிகமானோர் பலியாகினர்.








