நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒளியை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கிய எதிர் கோஷ்டி

பட மூலாதாரம், PMO/RSS
நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒளியை அவரது சொந்தக் கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்க முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளது அவரது எதிர் கோஷ்டி.
பிரச்சண்டா என்று அறியப்படும் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹல் - மாதவ் நேபாள் கோஷ்டி பிரதமர் ஷர்மா ஒளியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும்கூட நீக்குவதாக முடிவெடுத்தது.
கட்சியின் நிலைக்குழுக் கூட்டம் ஒன்றில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிலைக்குழு உறுப்பினர் ஜனார்தன் ஷர்மா இந்த தகவலை தெரிவித்தார்.
கட்சியிடம் கலந்தாலோசிக்காமல் நாடாளுமன்றத்தைக் கலைக்க பரிந்துரைத்தது உள்ளிட்ட செயல்களுக்கு ஷர்மா ஒளியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், அவர் பதில் ஏதும் தராததால் இது கட்சி விரோத நடவடிக்கையாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார் ஜனார்தன ஷர்மா.
எதனால் நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது:
முன்னதாக, நேபாள நாடாளுமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டதை அடுத்து அவர் கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அந்த இடத்தில் மாதவ் நேபாள் என்பவர் நியமிக்கப்பட்டார்.
ஆனால், பிரதமர் ஷர்மா ஒளி தரப்பும் தங்கள் கோஷ்டிதான் அதிகாரபூர்வமான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என்று கூறுகிறது. இப்போது அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக கூறிய தரப்பும் அதையே கூறுகிறது. இதில் எது அதிகாரபூர்வக் கட்சி என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யவேண்டும். இன்னும் ஆணையம் ஒரு முடிவுக்கு வரவில்லை.
பிற செய்திகள்:
- இலங்கை கடலில் இறந்த மீனவர் உடலை வாங்க மறுத்து மறியல்: சமாதானம் செய்தபின் உடல் அடக்கம்
- தனிச் சின்னத்தில் போட்டியிடுமா வி.சி.க.?: திருமாவளவன் பிரத்யேகப் பேட்டி
- கொரோனாவை சிறப்பாக கையாண்டதாக பாராட்டப்பட்ட கேரளத்தில் தொற்று அதிகம் பரவக் காரணம் என்ன?
- "நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன்" - ராகுல் காந்தி பேச்சு
- "எல்லாம் ஏதோ கனவு போல இருக்கிறது" - மெய்சிலிர்க்கும் நடராஜன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












