கொரோனா வைரஸ் பரவல் 2 ஆண்டுகளில் முடிவுக்கு வரலாம்: உலக சுகாதார நிறுவன இயக்குநர் டெட்ரோஸ்

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிவுக்கு வரும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1918ஆம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளு மறைய இரண்டாண்டுகள் ஆனதாக தெரிவித்தார்.
எனினும், தற்போதுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களை கொண்டு நோய்த்தொற்று பரவலை "குறுகிய காலத்தில்" கட்டுப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
"மனிதர்களுக்கிடையேயான தொடர்புகள் அதிகரித்துள்ளதால், வைரஸ் பரவலுக்கான வாய்ப்பு நிறைய உள்ளது" என்று அவர் கூறுகிறார்.
"அதே சூழ்நிலையில், நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கான தொழில்நுட்பமும், அறிவும் நம்மிடம் உள்ளது. தற்சமயத்தில் நமக்கு தேச ஒற்றுமையும், உலகளாவிய ஒற்றுமையும் மிகவும் அவசியமானது."

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

கடந்த 1918ஆம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளு பெருந்தொற்றால் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் ஐந்து கோடி மக்கள் உயிரிழந்தனர்.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட எட்டு லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2.27 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து மருத்துவ பாதுகாப்பு கவச உடை ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த டெட்ரோஸ், "பெருந்தொற்று காலத்தில் செய்யப்படும் இதுபோன்ற ஊழல்கள் என்னைப் பொறுத்தவரை, கொலைக்கு நிகரானது. ஏனெனில், சுகாதார பணியாளர்கள் பாதுகாப்பு கவச உடைகள் இல்லாமல் பணிபுரிவது அவர்களது உயிரையும், நோயாளிகளின் உயிரையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதை போன்றது. எந்தவிதமான ஊழலையும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று மேலும் கூறினார்.

தமிழ் வழியில் படித்து நாசாவின் தலைசிறந்த விஞ்ஞானியான மெய்யப்பனின் வெற்றிக்கதை

பட மூலாதாரம், NASA/ GETTY IMAGES
தமிழகத்தின் காரைக்குடியில் பிறந்து, தமிழ்வழியில் கல்வி பயின்று, அமெரிக்காவுக்கு குடிப்பெயர்ந்து இன்று உலகமே வியந்து பார்க்கும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பில் 24 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றி நடைப்போட்டு வருகிறார் தமிழரான மெய்யா மெய்யப்பன்.

இலங்கை "தமிழர் பூமி" - சர்ச்சையாகும் விக்னேஷ்வரனின் உரை

பட மூலாதாரம், Getty Images
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஷ்வரன், நாடாளுமன்றத்தில் முதல் நாள் அமர்வில் வெளியிட்ட கருத்து ஒன்று மிகப்பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது.
"இலங்கை நாடானது தமிழர் பூமி" எனவும், "இந்த மண்ணின் பூர்வீக குடிகள் தமிழர்கள்" எனவும், "தமிழ் மொழி இந்த நாட்டின் பிரதான மொழி" எனவும் விக்னேஷ்வரன் கடந்த வியாழக்கிழமையன்று உரை நிகழ்த்தியிருந்தார்.

மாரியப்பன், ரோஹித் சர்மா உள்பட 5 வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

பட மூலாதாரம், PIB
இந்திய விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா-2020 விருதுக்கு பாராலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன், இந்திய கிரிக்கெட் அணி துணை கேப்டன் ரோஹித் சர்மா, ஆசிய விளையாட்டுகள் போட்டியில் தங்கம் வென்ற வினேஷ் போகாட், டேபிள் டென்னிஸ் சாம்பியன் மணிகா பாத்ரா, ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

கொரோனா வேகமாக பரவும் மாநிலங்களில் ஒன்றானது புதுச்சேரி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த மே மாதம் இறுதி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று தினந்தோறும் அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 300க்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 143ஆக உயர்ந்து, இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக பதிவாகியுள்ளது.
விரிவாக படிக்க: கொரோனா வேகமாக பரவும் மாநிலங்களில் ஒன்றானது புதுச்சேரி


சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












