BBC Tamil: சிரியா நாட்டு ராணுவ இலக்குகள் மீது குண்டு வீசும் இஸ்ரேல் விமானம்

பட மூலாதாரம், EPA
இஸ்ரேலிய போர் விமானம் திங்கள்கிழமை சிரியாவின் ராணுவ இலக்குகளைத் தாக்கியது.
வழக்கத்துக்கு மாறாக இதனை இஸ்ரேல் ராணுவம் ஒரு அறிக்கை மூலம் உறுதிப் படுத்தியுள்ளது. சிரியாவின் அரசு ஊடகமும் இதனை ஒப்புக்கொண்டுள்ளது.
தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள ராணுவ சாவடிகளில் சேதாரம் ஏற்பட்டதாக கூறிய அந்த ஊடகம் என்னவிதமான சேதம் என்று குறிப்பிடவில்லை. குண்டு வைக்கும் முயற்சிக்கான பதிலடி இது என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை கோலன் ஹைட்ஸ் பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதியில் குண்டு வைக்க முயன்ற நால்வரை கொன்றதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்திருந்தது.கண்காணிப்பு காணொளிகள் அவர்கள் குண்டுவெடிப்பில் மாட்டிக்கொண்டதைக் காட்டுகின்றன. "எந்த அமைப்பு இந்த குண்டு வைப்பு வேலையில் ஈடுபட்டது என்பதை இவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியாது. ஆனால், இதற்கு சிரியா அரசே பொறுப்பு" என்று கூறியுள்ளார் இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஜொனாதன் கான்ரிகஸ்.
பிபிசி தமிழில் வெளியான பிற முக்கியச் செய்திகள்: அங்கொட லொக்கா: கோவையில் இறந்த இலங்கை கடத்தல் மன்னன்

இலங்கையில் கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த மத்துகமே லசந்த சந்தன பெரேரா என அழைக்கப்படும் அங்கொட லொக்கா கோயம்புத்தூரில் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த பிரபல தாதா, தமிழகத்தில் பதுங்கியிருப்பதாகவும், கோவையில் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கடந்த மாதம் தகவல்கள் வெளிவந்தன. ஆனால், இதுகுறித்து தமிழக காவல்துறையினர் உறுதி செய்யாமல் இருந்தனர்.
இந்த நிலையில், இலங்கையில் தேடப்பட்டுவரும் குற்றவாளி கோவையில் உயிரிழந்துள்ளதைக் கோவை மாநகர காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்துள்ளனர்.யார் இவர்? இவரது பின்னணி என்ன?விரிவாகப் படிக்க: கோவையில் இறந்த இலங்கை கடத்தல் மன்னன் - யார் இவர், பின்னணி என்ன?
அயோத்தி கோயில் அடிக்கல் நாட்டும் நேரம் பற்றி எழும் சர்ச்சைகள்

பட மூலாதாரம், Getty Images
ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். கோயிலின் அடித்தளத்தில் வெள்ளியால் செய்யப்பட்ட ஐந்து செங்கற்களை வெறும் 32 வினாடிகளில் வைக்க வேண்டும்.
இந்தச் சடங்கின் தேதி மற்றும் நேரம் குறித்து நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன, இந்த நிகழ்வுக்கான நேரத்தைக் குறித்த, மிகச் சிறந்த ஜோதிட வல்லுநராகக் கருதப்படும் ஆச்சார்யா கணேஸ்வர் ராஜ் ராஜேஸ்வர் சாஸ்திரி திராவிட், காசியின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.விரிவாகப் படிக்க: அயோத்தி கோயில் அடிக்கல் நாட்ட குறிக்கப்பட்டுள்ள நேரம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள்சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின் காஷ்மீரி பண்டிட்கள் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் 370 மற்றும் 35-ஏ பிரிவுகளை மத்திய அரசு 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்து மாநிலத்தை மறுசீரமைத்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
அந்த நாளிலிருந்து, இங்கு வசித்து வந்த, இடம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் மீண்டும் தங்கள் மண்ணுக்குத் திரும்பும் கனவைக் காணத் தொடங்கினர். அவர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கின் வாசல் வரை வந்து, ஜன்னல் வழியாகத் தங்கள் கனவின் மூலம் காஷ்மீரைப் பார்ப்பதாகவும் எண்ணத் தொடங்கினர்.
ஆனால் இப்போது ஒரு வருட காலத்திற்குப் பிறகு, தாங்கள் ஏமாந்துவிட்டதாகவே உணர்கிறார்கள். அவர்கள் இப்போது ஒரே ஜன்னலுக்கு அருகில் நின்று கனவு மட்டுமே காண்பதாக உணரத் தொடங்கியுள்ளனர், தங்களின் நீண்ட நாள் கனவு நனவாவது நடவாத காரியம் என்று நம்பிக்கை இழக்கத் தொடங்கியுள்ளனர். ஏன்?
விரிவாகப் படிக்க: ஜம்மு - காஷ்மீர்: சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரி பண்டிட்களின் நிலை என்ன?
கொரோனா இறப்புகள்: உண்மையை மறைக்கிறதா இரான்?

பட மூலாதாரம், Getty Images
இரான் அரசு வெளியிட்ட தரவுகளை விட அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என பிபிசி பாரசீக மொழி சேவை நடத்திய புலனாய்வில் தெரியவந்துள்ளது.
இரான் அரசைப் பொறுத்தவரை, ஜூலை 20ம் தேதி வரை 42,000 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். ஆனால் அந்நாட்டு சுகாதார துறை 14,405 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறுகிறது.விரிவாகப் படிக்க: கொரோனா வைரஸ் தொற்று இறப்புகள்: உண்மையை மறைக்கிறதா இரான்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












