தென் கொரிய ஆறு ஒன்று பன்றி ரத்தத்தால் சிவப்பான நிகழ்வு மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், YEONCHEON IMJIN RIVER CIVIC NETWORK
கொன்று புதைத்த 47 ஆயிரம் பன்றிகளின் ரத்தத்தால், வட மற்றும் தென் கொரிய எல்லைக்கு அருகில் ஓடுகின்ற ஆறு ஒன்று சிவப்பாக மாறியுள்ளது.
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் முயற்சியாக 47 ஆயிரம் பன்றிகளை தென் கொரிய அதிகாரிகள் தேர்ந்தெடுத்து கொன்றனர்.
எல்லைப் பகுதியில் கொல்லப்பட்ட பன்றிகள் புகைக்கப்பட்ட இடத்தில் பெய்த பலத்த மழை காரணமாக இம்ஜின் ஆற்றின் ஒரு கிளை நதியில் இந்த பன்றிகளின் ரத்தம் கலந்துவிட்டது.
ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் விலங்குகளிடம் வேகமாக பரவக்கூடிய, குணப்படுத்த முடியாத நோயாகும். இந்த நோய் தாக்கிய பன்றிகளில் எதுவும் உயிர் தப்புவதில்லை. ஆனால், இந்த நோய் மனிதருக்கு ஆபத்தானதில்லை.

பட மூலாதாரம், Getty Images
ஆற்றில் கலந்துள்ள ரத்தம் பிற விலங்குகளுக்கு நோய் தொற்று ஏற்பட காரணமாக அமையும் என்று கவலைகள் எழுந்துள்ள நிலையில், இந்தப் பன்றிகள் நோய் தொற்று நீக்கப்பட்ட பின்னர்தான் கொல்லப்பட்டன இன்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நதியில் ரத்தம் கலக்காமல் இருக்க அவசர கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்

பெண்ணுறுப்பு பற்றி பல தவறான கட்டுக் கதைகள் சமூக ஊடகங்களில் உள்ளன. அத்தகைய தவறான தகவல்களை இனம்கண்டு திருத்துவதை தனது பணியாக ஒரு பெண் செய்து வருகிறார்.
அமெரிக்காவிலும், கனடாவிலும் கடந்த 25 ஆண்டுகளாக மகப்பேறு மற்றும் பெண்கள் நல சிறப்பு மருத்துவராக இருக்கிறார் ஜென் குன்டர்.
பெண்களின் உடல்நலத்தில் மிகவும் அக்கறை கொண்டுள்ள இவர், "ட்விட்டரில் வாழும் மகப்பேறு மருத்துவர்" என்று குறிப்பிடப்படுகிறார்,
விரிவாக வாசிக்க: பெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்
இந்த கட்டுரைகளை வாசிக்க நீங்கள் விரும்பலாம்:

மகாராஷ்டிரா: பாஜகவின் தேர்தல் வெற்றி அரசியல் தோல்வியானது எப்படி?

பட மூலாதாரம், HINDUSTAN TIMES / GETTY IMAGES
மகாராஷ்டிராவில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க இயலாமல் போகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆனால் சற்று பின்னோக்கிப் பார்த்தால், பாஜக மற்ற அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கூட்டணி கட்சிகளிடமும் பொதுவாகவே அதன் ஆணவத்தை காண்பித்தற்கான விலையை கொடுத்தது தற்போது தெளிவாக தெரிகிறது. தனது குதிரை படையைபோல சிவசேனையையும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் முற்றிலும் தேவையற்றவர் என்றும் தேர்தலுக்கும் முன்பும் பின்பும் பாஜக கருதியது.
சிவசேனை உறுப்பினர்களைக் கைப்பற்ற நினைக்கும் பாஜகவை தடுக்கும் முயற்சியில் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்ரே முழுமையாக ஈடுபட்டுள்ளார்.
விரிவாக வாசிக்க: மகாராஷ்டிரா: பாஜகவின் தேர்தல் வெற்றி அரசியல் தோல்வியானது எப்படி?
இந்த கட்டுரைகளை வாசிக்க நீங்கள் விரும்பலாம்:

அயோத்தி தீர்ப்பு: அதிருப்தி தெரிவிக்கும் லிபரான் கமிஷன் முன்னாள் வழக்கறிஞர்

பட மூலாதாரம், பா. காயத்திரி அகல்யா
பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான அரசியல் தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங் ஆகியோரையும், பி.வி. நரசிம்ம ராவையும் புதுடெல்லியில் விக்யான் பவனில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ஆளாக்கியவர் சண்டிகரைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அனுபம் குப்தா.
1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து விசாரித்த நீதிபதி எம்.எஸ். லிபரான் கமிஷன் வழக்கறிஞராக இந்த வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன. கமிஷனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், 2009ல் அதன் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது குப்தா அதை குறைகூறினார்.
இந்த கட்டுரைகளை வாசிக்க நீங்கள் விரும்பலாம்:

குழந்தையின் விநோத நோயால் கைவிட்ட பெற்றோர்; உதவ முன்வரும் முகம் தெரியாதவர்கள்

பட மூலாதாரம், Getty Images
விநோதமான தோல் பாதிப்புள்ள, நேரடி சூரிய வெளிச்சத்தில் காட்டாமல் வைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள குழந்தை, டூரின் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆதரவின்றி கைவிடப்பட்டுள்ளது என்று இத்தாலி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தடிமனான தோலுடன் பிறந்த ஜியோவானினோ என்ற ஆண் குழந்தை பிறந்து நான்கு மாதமாகியுள்ள நிலையில், இவ்வாறு கைவிடப்பட்டுள்ளது. இந்தக் குழந்தைக்கு தோல் தடிமனாகவும், உலர்ந்த நிலையிலும் இருப்பது மரபணு பாதிப்பால் ஏற்படும் பிரச்சனையாகக் கருதப்படுகிறது.
இந்த கட்டுரைகளை வாசிக்க நீங்கள் விரும்பலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












