அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் யுரேனியம் தயாரிப்பை விரைவுபடுத்துகிறது இரான் மற்றும் பிற செய்திகள்

ஹசன் ரூஹானி

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஹசன் ரூஹானி

அணு ஆராய்ச்சி மற்றும் சோதனையில் இருக்கும் அனைத்து எல்லைக் கோடுகளையும் இரான் நீக்க இருக்கிறது. 2015 அணு ஒப்பந்த உடன்படிக்கைகளை மீறி மீண்டும் நடவடிக்கை எடுத்திருக்கிறது இரான்.

செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிப்பை விரைவுபடுத்த மையநீக்கிகளை உருவாக்க தொடங்கிவிட்டதாக அந்நாட்டுத் தலைவர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா, மீண்டும் இரான் மீது பொருளாதார தடைகள் விதித்தது.

அதற்கு பதிலடியாக ஏற்கனவே ஒப்பந்த உடன்படிக்கைகளை இரான் இருமுறை மீறிவிட்டது.

3.5 சதவீதம் அளவிற்கு குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அணுஉலைகளுக்கு எரிபொருளாக பயன்படுத்தலாம். ஆனால் 90 சதவீதம் அளவிற்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும்.

ஆனால், அமைதியான சூழலுக்கான நோக்கத்திலேயே அணு திட்டத்தை செயல்படுத்துவதாக இரான் மீண்டும், மீண்டும் கூறி வருகிறது.

Presentational grey line

பஞ்சாப் பட்டாசு தொழிற்சாலையில் வெடிப்பு

பஞ்சாப்

பட மூலாதாரம், GURPREET CHAWLA / BBC

பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பட்டாலாவிலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த வெடிப்புக்கு பின்னர், தொழிற்சாலை கட்டடம் இடிந்தது. பல தொழிலாளர்கள் இதில் சிக்கியுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், உள்ளூர் நிர்வாகமும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.

Presentational grey line

சினிமா டிக்கெட் விற்பனையில் தலையிடும் தமிழக அரசு

சினிமா

பட மூலாதாரம், HINDUSTAN TIMES/GETTY IMAGES

தமிழ்நாட்டில் சினிமா டிக்கெட் முழுவதுமாக ஆன்லைன் மூலமாகவே விற்பனையை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார். அவருடைய அறிவிப்பின் உண்மையான அர்த்தம் என்ன?

செவ்வாய்க்கிழமையன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, சினிமாவில் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் முறை தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

இது சினிமா ரசிகர்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அரசு இந்த ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தினால், ஒரு திரைப்படத்திற்கான டிக்கெட்டை ஆன்லைன் மூலம் மட்டுமே எடுக்க வேண்டுமா, அப்படியானால் கிராமங்களில் வசிப்பவர்கள், இணையத் தொடர்பை பயன்படுத்தத் தெரியாதவர்கள், ஆன்-லைன் வங்கிப் பரிவரித்தனைகளில் ஈடுபடாதவர்கள் என்ன செய்வார்கள் என கேள்வியெழுப்பப்பட்டது.

Presentational grey line

மாருதி சுசுக்கி இரண்டு நாட்கள் உற்பத்தி நிறுத்தம்

மாருதி சுசுக்கி

பட மூலாதாரம், MARUTISUZUKI.COM

வட இந்திய மாநிலமான ஹரியானாவில் உள்ள குருகிராம் மற்றும் மானேசர் ஆகிய இடங்களில் இருக்கும் தங்கள் தொழிற்சாலைகளை இரண்டு நாட்கள் மூட இருப்பதாக இந்தியாவின் மிக பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆறு மாதங்களாக விற்பனையில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டுள்ளதால், தனது இரண்டு தொழிற்சாலைகளை செப்டம்பர் 7 மற்றும் 9ம் தேதிகளில் மூடிவிட மாருதி சுசுக்கி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அந்த இரு நாட்களும் உற்பத்தி இல்லாத நாட்களாக அந்த நிறுவனத்தால் அனுசரிக்கப்படும்.

Presentational grey line

சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டம் - மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்த ஹாங்காங் அரசு

சீனா

பட மூலாதாரம், Getty Images

பல மாதங்களாக ஹாங்காங்கில் நீடித்த மக்கள் போராட்டங்களுக்குக் காரணமான சர்ச்சைக்குரிய சட்ட மசோதாவை முழுமையாக விலக்கிக்கொள்வதாக ஹாங்காங் நிர்வாகத்தின் தலைவர் கேரி லேம் தெரிவித்துள்ளார்.

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை சீனா மற்றும் தைவானுக்கு நாடுகடத்த இந்தச் சட்ட மசோதா வழிவகை செய்யும்.

1898 முதல் 99 ஆண்டுகள் பிரிட்டனால் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்த ஹாங்காங், 1997இல் சீனாவுடன் இணைந்தது. எனினும், 'ஒரு நாடு இரு அமைப்பு முறை' எனும் கொள்கையின்படி, சட்டம் இயற்றல், நிர்வாகம் உள்ளிட்டவற்றில் ஹாங்காங் தன்னாட்சி அதிகாரங்களைப் பெற்றிருந்தது.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: