அணுஆயுத ஒப்பந்தம்: புதினுக்கு அதிர்ச்சி அளித்த டிரம்ப் - அடுத்தது என்ன?

அணுஆயுத ஒப்பந்தம்: புதினுக்கு அதிர்ச்சி அளித்த டிரம்ப் - அடுத்தது என்ன?

பட மூலாதாரம், MIKHAIL KLIMENTYEV

ரஷ்யா மற்றும் சீனா இருநாடுகளும் ஒரு புதிய அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

இந்த யோசனை தொடர்பாக தான் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளுடனும் பேசியிருப்பதாக கூறும் அதிபர் டிரம்ப், இதுகுறித்து அந்நாடுகள் மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுடன் அமெரிக்கா மேற்கொண்டிருந்த ஒரு முக்கிய அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதை அடுத்து அதிபர் டிரம்பின் கருத்துகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் முடிவு இருநாடுகளுக்கு இடையே ஒரு புதிய ஆயுதப் போட்டியை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பனிப்போர் காலத்தில் செய்து கொள்ளப்பட்ட மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தத்தின்படி, 500 கி.மீ. முதல் 5,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை இந்த ஒப்பந்தம் தடை செய்தது.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

புதியவகை சீரியங்கு ஏவுகணைகளை (குரூய்ஸ் மிசைல்) பயன்பாட்டுக்கு கொண்டுவந்ததன் மூலம் இந்த ஒப்பந்தத்தை ரஷ்யா மீறியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியதை தொடர்ந்து, அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது.

ஆனால், ஒப்பந்தத்தை மீறவில்லை என்று ரஷ்யா மறுத்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர், தனது நிர்வாகம் ரஷ்யாவுடன் ஒரு அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து பேசி வருவதாகவும், இருதரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் மாற்றங்களை செய்யவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், "ஏதேனும் ஒரு கட்டத்தில் அணு ஆயுத ஒப்பந்தத்தில் சீனாவை நிச்சயமாக சேர்க்க வேண்டும்," என்றும் கூறியுள்ளார்.

"சீனாவும், ரஷ்யாவும் இந்த புதிய ஒப்பந்தம் குறித்து பேசுவதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்," என்று இறுதியாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார் டிரம்ப்.

9M729 ஏவுகணைகளால் முறிந்த ஒப்பந்தம்

முன்னதாக, சர்ச்சைக்குரிய 9M729 ஏவுகணைகள் பலவற்றை ரஷ்யா பயன்பாட்டுக்கு கொண்டுவந்திருப்பது தொடர்பாக தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்கா சொல்லியது. இந்த வகை ஏவுகணைகளை நேட்டோ, SSC-8 வகை ஏவுகணைகள் என்று புரிந்துவைத்திருந்தது. அப்போது இந்த குற்றச்சாட்டை தமது கூட்டணி நாடுகளின் அமைப்பான நேட்டோவிடம் அமெரிக்கா தெரிவித்தது. அமெரிக்காவின் குற்றச்சாட்டை நேட்டோ நாடுகள் ஏற்றுக்கொண்டன.

கோர்பச்சேவ்-ரீகன் இடையில் 1987ல் கையெழுத்தாகும் மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தம்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, கோர்பச்சேவ்-ரீகன் இடையில் 1987ல் கையெழுத்தாகும் மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததற்கு ரஷ்யாவே முழு காரணம் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பேயோ ஓர் அறிக்கையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

முறைப்படி ஒப்பந்தம் 'இறந்துவிட்டதாக' ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது.

ரஷ்யாவின் சர்ச்சைக்குரிய 9M729 ஏவுகணையால் நேட்டோ நாடுகளின் பாதுகாப்புக்கு உண்டாகும் இடர்களுக்கு பொறுப்பான, அளவான முறையில் பதிலடி தரப்படும் என்று நேட்டோ அமைப்பின் தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் குறிப்பிட்டார்.

சௌதி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஆண்கள் துணையின்றி என்னென்ன செய்ய அனுமதி ?

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :