அமெரிக்க எல்லைச்சுவர் திட்டம்: அரசுப்பணிகள் முடக்கத்தை தவிர்க்க புதிய ஒப்பந்தம்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அரசாங்கத்திற்கு எல்லைச்சுவர் தொடர்பாக நிதியுதவி அளிப்பது மற்றும் மற்றொரு நாடு தழுவிய அரசுப்பணிகள் முடக்கத்தை தடுக்கவும் ஜனநாயக கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளனர்.
திங்கள்கிழமை இரவில் கேபிடல் ஹில்லில் நடந்த ஒரு சந்திப்பில் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக அரசு வழக்கறிஞர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
மத்திய நிதி ஆதரவு ஒப்பந்தம் காலாவதியாகின்ற, வரும் வெள்ளிக்கிழமைக்குள் சட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்ற இக்கட்டான நிலை இருந்த வேளையில் தற்போது இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், அதேவேளையில் இந்த உடன்படிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்றுக் கொள்வாரா என்பது தெளிவாக தெரியவில்லை. தற்போது டெக்சாஸில் ஒர் அரசியல் பேரணியில் அவர் கலந்து கொண்டிருக்கிறார்.
எல்லையில் சுவர் கட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் வரை அரசாங்க முடக்கம் தொடரும் என டிரம்ப் கூறி முன்பு கூறி இருந்தார்.
பேச்சுவார்த்தைகள் முன்னர் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை வைத்திருப்பது மற்றும் அதிபர் டிரம்பின் எல்லைச்சுவர் திட்டத்துக்கு நிதியுதவி அளிப்பது ஆகியவை தொடர்பாக முன்னதாக பேச்சுவார்த்தைகளில் தடை ஏற்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
மெக்ஸிகோ எல்லையில் சுவர்கட்டும் அதிபர் டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க காங்கிரஸ் மறுத்து வரும் நிலையில் ஏற்பட்ட சிக்கலால், பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசுப் பணிகள் முடக்கம் நடந்தது.
கவர்ன்மென்ட் ஷட் டவுன் என்று கூறப்படும், அரசுப் பணிகள் முடக்கம், அமெரிக்காவுக்கு புதிதில்லை என்றபோதும், அண்மையில் அது பல நாட்களுக்கு நீடித்தது நாட்டில் கவலைகளை ஏற்படுத்தியது.
அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட காலமாக கடந்தமுறை நடந்த வேலைநிறுத்தம் 35 நாட்களுக்கு நீடித்தது.
இந்த தற்காலிக வேலை நிறுத்தம் மற்றும் அரசுப்பணிகள் முடக்கத்தால் அமெரிக்க பொருளாதாரத்துக்கு 11 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், WIN MCNAMEE VIA GETTY IMAGES
நீண்ட காலமாக நடந்த பணிகள் முடக்கத்தால்நாட்டில் பல லட்சக்கணக்கானோருக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மருத்துவமனை பராமரிப்பு, விமான போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சட்ட அமலாக்கத்துறை போன்ற முக்கிய சேவைகளிலுள்ளவர்கள் மட்டும் ஊதியமின்றி வேலை செய்தனர்.
இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தை பல மணி நேரம் நீடித்தது. பின்னர் திங்கள்கிழமை இரவில் இது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டது.
புதிய ஒப்பந்தம் எப்படி உருவானது?
இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தை பல மணி நேரம் நீடித்தது. பின்னர் திங்கள்கிழமை இரவில் இது தொடர்ப்பிக்க ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டரான ரிச்சர்ட் ஷெல்பி, எல்லைச்சுவர் திட்டத்துக்கு நிதியுதவி அளிப்பது மற்றும் அரசுப்பணியில் முடக்கமாவதை தடுப்பது ஆகியவை தொடர்பாக இருந்த பல பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுள்தாக தெரிவித்தார்.
''இது தொடர்பாக ஓர் உடன்படிக்கையை எட்டியுள்ளோம்'' என்று கூறிய அவர், நடப்பு வாரத்தில் இது குறித்த மற்ற அம்சங்களை ஆராய்ந்தது தகுந்த முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












