சீன நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் உகாண்டா ராணுவம்

பட மூலாதாரம், Getty Images
சீன வர்த்தக நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு ராணுவத்தின் தலைமையில் நடவடிக்கை எடுக்க உகாண்டா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
120 சீன முதலீட்டாளர்களுடன் நடத்திய கூட்டத்திற்கு பின்னர் இந்த உத்தரவு வந்துள்ளது.
தங்களின் சில தொழிற்சாலைகளில் இருந்து பெருந்தொகை கொள்ளை போன சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக இந்த சீன முதலீட்டாளர்கள் கூறியுள்ளனர்.
தொழிற்பூங்காக்களில் ரோந்து பணியை அதிகரிப்பது, சிசிடிவி கேமராக்களை பொருத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிபர் யோவேரி மூசேவனி உத்தரவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
உகாண்டாவில் நடைபெறும் வன்முறைகள் சமீபத்திய வாரங்களில் அதிகரித்துள்ளன.
உள்ளூர் புதிய பாதுகாப்பு படைப்பிரிவையும் அரசு உருவாக்கி வரும் நிலையில், தலைநகரிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ராணுவம் ரோந்து பணிகளை தொடங்கியுள்ளது.


தலைநகர் கேம்பாலாவில் குற்றங்கள் அதிகரிப்பதை தடுப்பதற்கு உகாண்டா அரசு புதிய பாதுகாப்பு படைப்பிரிவை உருவாக்கி வருகிறது. ஆனால், இதுவே பின்னர் சட்டமாகலாம் என்று விமர்சகர்கள் அஞ்சுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












