அமெரிக்கா விதித்த தடை: இரான் மக்கள் என்ன சொல்கிறார்கள்?

அமெரிக்கா விதித்த தடை

பட மூலாதாரம், EPA

இஸ்லாமிய குடியரசின் பொருளாதாரத்தை இலக்காக வைத்து இரான் மீது கடுமையான தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இரானின் தவறான நடவடிக்கைகளை நிறுத்துவதே இதன் நோக்கம்.

இரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக இந்தாண்டு தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் அறிவித்தார். தற்போது இரான் மீது மீண்டும் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

இந்த தடைகள் இரான் மக்களை எவ்வாறு பாதிக்கிறது?

இரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளால் தங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி குறித்து பிபிசி பெர்ஷிய சேவையிடம் சிலர் பகிர்ந்து கொண்டனர்.

அயே, அரசு அதிகாரி

இத்தடைகள் இரானின் பல்வேறு துறைகளில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அரசு அதிகாரிகள் மீதும். இதனால், நாட்டை நிர்வாகிப்பதில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமானால் இதையெல்லாம் தாங்கிக் கொள்ளலாம் என அயே கூறுகிறார்.

"அமெரிக்க விதித்த தடைகள் எங்கள் வாழ்க்கையை பாதித்துள்ளது" என்றார் அவர்.

"இத்தடைகள் இஸ்லாமிய குடியரசை வீழ்ச்சியடைய செய்யும் என்றால், நான் இதனை பொறுத்துக் கொள்ள தயாராக உள்ளேன். என் வாங்கும் திறன் குறைந்து கொண்டு வருகிறது. இதெல்லாம் இஸ்லாமிய குடியரசு வீழ்ந்து, ஜனறாயக அரசு வரவேண்டும் என்பதற்காகத்தான்" என்று அவர் தெரிவித்தார்.

இலங்கை

மஹதிஸ், பிரான்சில் படிக்கும் மாணவர்

வெளிநாடுகளில் படிக்கும் இரானிய மாணவர்களின் முக்கிய பிரச்சனை, அதன் வங்கி அமைப்பு மற்றும் நடவடிக்கைகள் என்கிறார் மஹதிஸ். தற்போது இந்த தடைகளினால், நிலைமை மேலும் மோசமாகி உள்ளதாக அவர் கூறுகிறார்.

"நான் இங்கு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது, எனக்கு மற்றும் பிற இரானிய மாணவர்களுக்கு வங்கி கணக்கு திறப்பது மிகவும் கடினமாக இருந்தது. தற்போது இந்த தடைகளினால், இரான் நாட்டிலிருந்து எங்களால் பணம் பெற முடியவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

"இரான் நாட்டினர் இரானுக்கு வெளியே பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால், அதற்கு தடை விதிக்கப்படுகிறது அல்லது ஆவணங்கள் சரிபார்ப்புக்கு கேட்கப்படுகிறது. இது பணம் மற்றும் மாற்று விகிதத்துக்கு அடுத்து பெரிய பிரச்சனையாக இருக்கிறது"

மொஹமத், சஹேதனின் குடியிருப்புவாசி, தென்-கிழக்கு இரான்

இத்தடைகளால் இறக்குமதி பொருட்களின் விலை உயரும் என்பதினால், சில்லறை வியாபாரிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது இவை ஏற்படுத்தும் போகும் தாக்கங்கள் குறித்து மொஹமத் கவலை கொள்கிறார்.

"எங்களால் எங்களுக்கே துணிகளை தயாரிக்க முடியவில்லை. இது மோசமான நிலைமை. அவற்றின் விலை அதிகமாக உள்ளது. ஆனால், எங்கும் வாங்கும் திறன் பூஜ்ஜியமாகும்" என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா விதித்த தடை

பட மூலாதாரம், EPA

ரூச்பே, வியாபாரி

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து மின்சார பாகங்களை இறக்குமதி செய்யும் ரூச்பே போன்ற வியாபாரிகளும் தங்களின் விநியோகம் குறித்து கவலை கொள்கின்றனர்.

"பரிமாற்ற விகிதம் அதிகரிக்கும்போது, அதனை பயணாளர்கள் வாங்கும்போது பல மடங்கு அதிகமாக இருக்கும். எங்களுக்கு எப்போதும் விநியோகிக்கும் ஆதாரம் தற்போது அப்பணியை செய்வதில்லை என்பதால், நாங்கள் வேறு வழியாக பொருட்களை கொண்டுவர வேண்டியுள்ளது. இதனால் விலை அதிகமாகிறது.

இவ்வளவு விலை விற்கும்போது அதனை வாடிக்கையாளர்கள் வாங்கமாட்டார்கள். அதனால் எங்கள் தொழில் ஆபத்தில் உள்ளது" என்கிறார் அவர்.

வஹித், வீடு வாங்க உத்தேசிப்பவர்

மின்சார பாகங்கள் மற்றும் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது குறித்து கவலை தெரிவிக்கும் வஹித், வீட்டு விலை மற்றொரு பகுதியில் அதிகரித்து வருவதாக கூறுகிறார். இதனால் வீடு வாங்குவது கடினமாக உள்ளது.

"கடன் வாங்கி வீடு வாங்குவதற்காக பல ஆண்டுகளாக பணம் சேமித்து வந்தேன். ஆனால், இப்போது வீட்டின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. என் வருமானம் மிகவும் குறைவு. எனக்கு நான் வீடு வாங்குவேன் என்ற நம்பிக்கை இல்லை. எதிர்காலத்தை குறித்து தற்போது எந்த திட்டங்களும் இல்லை" என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: