நைஜீரியா மசூதியில் தற்கொலை குண்டு தாக்குதல்: 24 பேர் பலி

பட மூலாதாரம், STR/AFP/Getty Images
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் மசூதி ஒன்றில் நிகழ்ந்த இரட்டை தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள முபி நகரில் உள்ள இந்த மசூதியில் பிற்பகல் தொழுகைக்காக முஸ்லிம்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் மசூதிக்கு உள்ளேயும், வெளியேயும் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
இஸ்லாமியவாதக் குழுவான போகோ ஹராம் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அடமாவா மாகாணக் காவல்துறை தெரிவித்துள்ளது. வடக்கு நைஜீரியாவில் இஸ்லாமிய அரசு ஒன்றை உருவாக்குவதற்காக 2009 முதல் வன்முறைத் தாக்குதல்களைத் தொடுத்து வந்தது போகோ ஹராம். இந்த வன் செயல்களால் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 20 லட்சத்துக்கும் அதிகமானோர் புலம் பெயர்ந்தனர்.

பிற்பகல் 1 மணிக்கு மசூதியில் முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவும், தொழுகையாளர்கள் தப்பி ஓடியபோது மற்றொரு குண்டுதாரி மசூதிக்கு அருகே குண்டினை வெடிக்கச் செய்ததாகவும் மாகாண போலீஸ் ஆணையர் அப்துல்லாஹி யெரிமா தெரிவித்தார்.
ஒரு டஜனுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- பாலிவுட் வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைப்பதா? - மனம் திறக்கும் நடிகைகள்
- பெரு: 550 ஆண்டுகளுக்கு முன் நரபலி கொடுக்கப்பட்ட 140 குழந்தைகள்
- குழந்தைகளுக்கு ஆக்சிஜன் ஏற்பாடு செய்ததால் 9 மாதம் சிறையில் இருந்தாரா டாக்டர் கஃபீல்?
- தமிழகத்தின் வறண்ட பூமியை சோலைவனமாக்கிய பஞ்சாப் விவசாயிகள்
- ஆப்கானிஸ்தான் பிபிசி செய்தியாளர் சுட்டுக் கொலை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








