மதுபான விற்பனையில் இறங்குகிறது 'கோகோ கோலா'

125 ஆண்டுகள் பழமையான வரலாற்றை கொண்ட கோகோ கோலா நிறுவனம் முதல் முறையாக மதுபான விற்பனையில் இறங்க உள்ளது. ஒரு புதிய வகை மதுபானத்தை ஜப்பானில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

மதுபான விற்பனையில் இறங்கும் கோகோ கோலா நிறுவனம்

பட மூலாதாரம், Getty Images

ஜப்பானில், உள்ளூர் எரி சாராயமான சோச்சு- வை கொண்டு தயாரிக்கடும் சூ-ஹி எனும் பானம் பிரபலமாகி வருகிறது. இதனை தனக்கு சாதகாமாக பயனபடுத்திக் கொள்ள இந்த வகை மதுபான விற்பனையில் இறங்க கோலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அல்கஹால் உள்ளடக்கம்

இந்த மதுபானத்தில் 3 முதல் 8 சதவீதம் வரைதான் அல்கஹால் உள்ளடக்கம் இருக்கும்.

ஜப்பானில் உள்ள கோக் நிறுவனத்தின் மூத்த விற்பனை நிர்வாகி, "குறைந்த ஆளவு அல்கஹால் உள்ளடக்கம் உள்ள பானத்தின் விற்பனையை இதற்கு முன் முயற்சி செய்து பார்த்ததில்லை. ஆனால், நாங்கள் வலுவாக காலூன்றி உள்ள விஷயத்தில் மட்டும் அல்லாமல், பிற விஷயங்களையும் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம் என்பதற்கான சான்று இது."

மதுபான விற்பனையில் இறங்கும் கோகோ கோலா நிறுவனம்

பட மூலாதாரம், Getty Images

குறைந்த அளவே அல்கஹால் உள்ளடக்கம் இருப்பதால், இந்த வகை பானங்கள் 'பீர்'- க்கு மாற்றாக ஜப்பானில் பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக பெண்கள் மத்தியில்.

ஜப்பான் நாட்டு நிறுவனங்களான கிரின், சண்டொரி, அசாஹி ஏற்கெனவே இவ்வகை பானத்தை அறிமுகப்படுத்திவிட்டது.

இப்போது இளைஞர்கள் உடல் நலத்தில் அதிக கவனம் கொள்ள தொடங்கிவிட்டதால், கோலா நிறுவனம் டீ உள்ளிட்ட பிற பானங்களிலும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :