ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
மியான்மர் தலைவர் அமைத்த குழுவிலிருந்து அமெரிக்கா விலகல்
ரோஹிஞ்சா விவகாரத்தில் ஆலோசனை வழங்குவதற்காக மியான்மர் தலைவர் ஆங் சாங் சூகி அமைத்த சர்வதேச குழுவிலிருந்து அமெரிக்க பிரதிநிதியான பில் ரிச்சர்ட்ஸன் ராஜினாமா செய்துள்ளார்.

பட மூலாதாரம், EPA
மேலும், அந்த குழு "பெயரளவுக்கே" செயல்பட்டது என்று கூறியதுடன், தனது நீண்டகால நண்பரான சூகி, தலைமை ஏற்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிரியா படைகளுக்கு குர்திஷ் அதிகாரிகள் அழைப்பு
சிரியாவின் வடக்கு பகுதியில் துருக்கி தனது தாக்குதலை தொடர்ந்து வருவதால் சிரியா ராணுவப் படைகள் அப்பிராந்தியத்தின் எல்லையை பாதுகாக்க வேண்டுமென்று குர்திஷ் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

பட மூலாதாரம், AFP/GETTY
"துருக்கியின் இந்த செயல்பாட்டின் நோக்கமே அஃப்ரினை ஆக்கிரமிப்பதன் மூலம் மேலும் சிரியாவின் நிலப்பகுதியை குறைப்பதாகும்" என்று அவர்கள் கூறியுள்ளனர்.

பாலஸ்தீனத்தை அச்சுறுத்தும் டிரம்ப்
சமாதான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க ஒப்புக் கொள்ளாவிட்டால், பாலஸ்தீனியர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படுமென்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

பட மூலாதாரம், AFP
பாலத்தீனத்தின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவிகளுக்கான வழங்கப்படும் நிதியுதவி குறித்து டிரம்ப் பேசியதாக வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

18 இலட்சம் பேருக்கு குடியுரிமை வழங்க திட்டம்
எல்லை சுவர் கட்டுவதற்கான வழங்கப்படும் நிதியுதவிக்கு ஈடாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய 18 இலட்சம் பேருக்கு குடியுரிமையை வழங்கும் திட்டத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், AFP
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சியுடன் குடியரசு கட்சியினர் வரவு செலவு திட்ட மசோதா குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் உதவியாளர் ஒருவர் இதுகுறித்து விவரித்துள்ளார்.

பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












