ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

ஸ்டீவ் பேனனுக்கு நெருக்கடி

ஸ்டீவ் பேனனுக்கு நெருக்கடி

பட மூலாதாரம், Reuters

அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்னாள் அரசியல் கொள்கை வகுப்பு குழுவின் தலைவரான ஸ்டீவ் பேனன் , ப்ரீய்ட்பார்ட் என்ற வலதுசாரி வலைதளத்தின் நிர்வாகத் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். பத்திரிக்கையாளர் மைக்கெல் வோல்ஃப் எழுதிய "Fire and Fury: Inside the Trump White House" என்ற புதிய புத்தகத்தில் டிரம்ப் மகனை "தேசதுரோகி" மற்றும் "நாட்டுப்பற்று இல்லாதவர்" என பேனன் கூறியதாக பல குற்றச்சாட்டுகள் இடம்பெற்ற நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளது.

Presentational grey line

பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும்

பொருளாதார வளர்ச்சி

பட மூலாதாரம், DAN KITWOOD/GETTY IMAGES

இந்த வருடம் உலக பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என உலக வங்கி கூறியுள்ளது. 2017-ம் ஆண்டு எதிர்பார்த்ததை விட உலக பொருளாதார வளர்ச்சி நன்றாக இருந்தது.

Presentational grey line

கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு

கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு

பட மூலாதாரம், Getty Images

லிபியா கடலில் அகதிகளை அழைத்து படகு கடலில் கவிழ்ந்ததால் டஜன் கணக்கானவர்கள் போய் உள்ளனர்.

Presentational grey line

கொரிய நாடுகளின் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா வரவேற்பு

வட கொரியா- தென் கொரியா இடையே இன்று பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், EPA

வட கொரியா தென் கொரியா இடையிலான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னெற்றத்தை அமெரிக்கா வரவேற்றுள்ளது. எதிர்கால பேச்சுவார்த்தையில் பங்குபெற விரும்புவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :