சென்ற வார உலக நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு

கடந்த வாரம் உலக நாடுகளில் நடைபெற்ற நிகழ்வுகளின் சிறந்த புகைப்படங்களின் தொகுப்பு.

A baby snow leopard is held next to a needle

பட மூலாதாரம், BRITTA PEDERSEN/ Getty Images

படக்குறிப்பு, பெர்லினில் உள்ள டியர்பார்க் வனவிலங்கு பூங்காவில், முதல் தடுப்பூசியை பெற தயாராகும் ஒரு குட்டி பனிச்சிறுத்தை. இதற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.
A man hits a flaming tyre with a stick

பட மூலாதாரம், Goran Tomasevic/ Reuters

படக்குறிப்பு, நைரோபியில், எதிர்க்கட்சித் தலைவர் ரயிலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் எரிந்து கொண்டிருக்கும் டயர் ஒன்றை தள்ளுகின்றனர். மாகாண தேர்தல் முடிவுகளில் அதிபர் உஹூரு கென்யாட்டா வலுவான நிலையில் முன்னிலையில் இருப்பதை போன்று காட்ட தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்ப அமைப்பு முறை ஊடுருவப்பட்டது என்று ஒடிங்கா கூறியிருந்தார்.
The crowd watches a successful wedding proposal taking place between a couple dressed as "Pachucos" during the Quinceanera (15th birthday) of a teenager in downtown Ciudad Juarez, Mexico, 5 August 2017.

பட மூலாதாரம், Jose Luis Gonzalez/ Reuters

படக்குறிப்பு, மெக்ஸிக்கோவில் பதின்ம வயதினர் ஒருவரின் 15வது பிறந்தநாள் விழாவின் போது, பச்சுகோஸ் என்ற ஆடை வகையை அணிந்த ஜோடியின் திருமண முன்மொழிவை கூட்டத்தினர் ரசிக்கும் காட்சி.
Anicka Newell of Canada reacts during the Women's Pole Vault Final at the World Athletics Championships in London on 6 August 2017.

பட மூலாதாரம், Dylan Martinez/ Reuters

படக்குறிப்பு, லண்டனில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான கம்பை வைத்து தாண்டும் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கனடாவின் அனிகா நேவெல்.
A row of dancers perform with colourful hair over their faces on The Royal Mile in Edinburgh as part of an Edinburgh Fringe Festival.

பட மூலாதாரம், David Cheskin/PA

படக்குறிப்பு, எடின்பர்க் ஃபிரின்ஞ் திருவிழா எனப்படும் மிகப்பெரிய ஓவியத்திருவிழாவில், தி ராயல் மைல் வீதியில் நடைபெற்ற பெண்களின் கலை நிகழ்ச்சி.
Lots of hot air balloons gather together at the Bristol International Balloon Fiesta

பட மூலாதாரம், Steve Parsons/ PA

படக்குறிப்பு, பிரிஸ்டலில் நடைபெற்ற சர்வதேச பலூன் திருவிழாவில், வானில் பறக்கத் தயாராகும் பலூன்கள்.
A girl in army wear concentrates on assembling a gun at the 2017 International Army Games.

பட மூலாதாரம், Maxim Shemetov/ Reuters

படக்குறிப்பு, ரஷ்யாவின் டைமன் பகுதிக்கு வெளியே இருக்கும் ஆண்ட்ரிவெஸ்கி மின்னணு போர் நடவடிக்கை தந்திரோபாய மையத்தில் பெண் ஒருவர் தன்னுடைய துப்பாக்கியை பொருத்தும் காட்சி.
Performers dressed as Pikachu, a character from Pokemon series game titles, march during the Pikachu Outbreak event, 9 August 2017.

பட மூலாதாரம், Tomohiro Ohsumi/ Getty Images

படக்குறிப்பு, பிக்காச்சு போன்று வேடமணிந்த கலைஞர்கள் ஜப்பானின் கேனகாவா பிராந்தியத்தின் யோகோஹாமா நகரில் பேரணியாக நடந்த காட்சி.
The Great Buddha of Nara at Todaiji Temple is cleaned by monks on pulleys.

பட மூலாதாரம், Buddhika Weerasinghe/ Getty Images

படக்குறிப்பு, ஜப்பானில் உள்ள டோடாய்ஜி கோயிலில் உள்ள மிகப் பிரம்மாண்ட புத்தர் சிலையை கோடைகால சடங்காக சுத்தம் செய்யும் பெளத்த பிக்குகள்.
A goat has a crown placed on its head, 10 August 2017.

பட மூலாதாரம், Clodagh Kilcoyne/ Reuters

படக்குறிப்பு, அயர்லாந்தில் உள்ள கில்லோர்கிலினில் தி பக் ஃபேர் என்ற கண்காட்சியில், உள்ளூர்வாசிகள் சிறந்த காட்டு ஆடு ஒன்றை தேர்ந்தெடுத்து அதற்கு கிங் பக் என்ற பட்டத்தை வழங்குகின்றனர். மூன்று நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
A girl looks at a fence covered with pastel ribbons

பட மூலாதாரம், Kim Hong-Ji/ Reuters

படக்குறிப்பு, தென் கொரியாவில் உள்ள பாஜுவில், வட கொரியாவை பிரிக்கும் ராணுவமற்ற பிராந்தியத்தில் உள்ள ஒரு முள்வேலி இது. அமைதிக்காக ரிப்பன்கள் மற்றும் கல்வெட்டுகளால் மறைக்கப்பட்டிருக்கும் காட்சி.

அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :