மியான்மர் அமைதி பேச்சுவார்த்தைகள்: 5 தசாப்த உள்நாட்டு போர் முடிவுக்கு வருமா?
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மியான்மரில் நடைபெற்று வந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் அந்நாட்டில் அமைதி பேச்சுவார்த்தைகள் நடக்கவுள்ளன.

பட மூலாதாரம், Reuters
அரசு மற்றும் பர்மிய ராணுவத்துக்கு இடையே நடக்கவுள்ள இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க, நாட்டின் இன சிறுபான்மை அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள், மாகாண தலைநகரான நைபிடாவில் குழுமியுள்ளனர்.
நாடு தழுவிய அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தனது முதல் முன்னுரிமையென மியான்மரின் தலைவர் ஆங் சான் சூ சி தெரிவித்துள்ளார்.
ஆனால், கடந்த ஆண்டில் அவர் பதவியேற்றதில் இருந்து இன ரீதியான மோதல்கள் நாட்டில் அதிகரித்துள்ளன.
மியான்மரின் பெரும்பான்மையான இன சிறுபான்மை குழுக்கள் தங்களுக்கு அதிக சுயாட்சி மற்றும் நாட்டின் தேசிய வளங்களில் கூடுதல் பங்கு ஆகியவற்றை வழங்க வேண்டுமென விரும்புகின்றன.
ஆனால், இந்த இரு விருப்பங்களையும் மியான்மர் ராணுவம் எப்போதும் தடுத்துள்ளது.
இதையும் படிக்கலாம் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












