இரான் தேர்தலில் பெண்களின் ஆர்வம் (புகைப்படத் தொகுப்பு)

இரான் அதிபர் தேர்தலில் சுமார் 40 மில்லியன் வாக்குகள் பதிவான நிலையில், அதிபரைத் தேர்ந்தெடுப்பதில் பெண்கள் காட்டிய ஆர்வம் குறித்த புகைப்படத் தொகுப்பு.

An Iranian woman (R) flashes the victory sign as she waits with others to cast her ballot in the Iranian presidential elections at a polling station in Tehran, Iran, 19 May 2017

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் சுமார் 56 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.
Iranians vote in the twelfth presidential election on May 19, 2017 in the city of Qom, south of the capital Tehran, Iran

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குறைந்த எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு குறித்த அச்சங்கள் அடிப்படை ஆதாரமற்றவை என நிரூபணமாகியுள்ளது. சுமார் 70 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
A voting card held by a woman in an abaya - Qom, Iran - 19 May 2017

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பழமைவாத மதகுருவான இப்ராகிம் ரைசி மற்றும் மிதவாத அதிபர் ஹசன் ரூஹானி ஆகிய இருவரிடையே போட்டி நிலவியது.
Iranians vote in the twelfth presidential election on May 19, 2017 in the city of Qom, south of the capital Tehran, Iran

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரானில் 1963 ஆம் ஆண்டில்தான் முதன்முதலில் வாக்களிக்கும் உரிமையை பெண்கள் பெற்றனர். ஆனால், தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு வந்தனர்.
A woman residing in the US shows ink on her finger after casting her vote for the Iran Presidential election on May 19, 2017 at a polling station at Manassas Mosque in Manassas, Virginia

பட மூலாதாரம், AFP/Getty Images

படக்குறிப்பு, ரூஹானியின் தலைமையின் கீழ், அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை இரான் ஏற்படுத்தியது. இந்த இரானிய பெண் விர்ஜினியாவில் உள்ள மசூதி ஒன்றில் தன்னுடைய வாக்குகளை பதிவு செய்தார்.
A veiled little Iranian girl stands in a line with her mother among women queing to vote in the Iranian presidential elections outside a polling station set up in the Abdol Azim shrine in the city of Shahre-Ray, south of the capital Tehran, Iran, 19 May 2017.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் திரண்டதால் வாக்கெடுப்பு பல மணி நேரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
Iranians pose fo selfie photos after casting their ballots in the Iranian presidential elections at a polling station in Tehran, Iran, 19 May 2017

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, பதிவான வாக்குகளில் சுமார் 58 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை ஹசன் ரூஹானி பெற்றார்.
Veiled Iranian women waits in a line to cast their ballots in the Iranian presidential elections at a polling station set up at the Abdol Azim shrine in the city of Shahre-Ray, south of the capital of Tehran, Iran, 19 May 2017

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, தெற்கு டெஹரானில் உள்ள ஷெஹர் ரே என்ற நகரத்தில் உள்ள மசூதி ஒன்றில் வாக்களிக்க திரண்டுள்ள பெண்கள் கூட்டம்
Woman holds her voting slip in Tehran, Iran - 19 May 2017

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 140 நாடுகளில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவர் டெஹ்ரானில் வாக்களித்த பெண்.
வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடத்திருப்பதாக ரூஹானியின் போட்டி வேட்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடத்திருப்பதாக ரூஹானியின் போட்டி வேட்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.