தென் கொரிய அதிபர் பதவி நீக்கத்தை உறுதி செய்தது நீதிமன்றம்

தென் கொரியாவின் அதிபர் பார்க் குன் ஹெவை பதவியில் இருந்து நீக்கிடும் நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை அந்நாட்டின் உயரிய நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

பார்க் குன் ஹெ

பட மூலாதாரம், Sean Gallup/Getty Images

படக்குறிப்பு, தென் கொரியாவின் முதலாவது பெண் அதிபராக பார்க் குன் ஹெ புகழ்பெற்றிருந்தார்

நாட்டின் விவகாரங்களில் தன்னுடைய நெருங்கிய தோழி சோய் சூன்-சில்லை தலையிட அனுமதித்தன் மூலம், பார்க் குன் ஹெ சட்டத்தை மீறியுள்ளார் என்று இந்த அரசியல் சாசன நீதிமன்றம் கூறியுள்ளது.

காணொளி: தென் கொரிய அதிபர் பதவி நீக்கம்

காணொளிக் குறிப்பு, தென் கொரிய அதிபர் பதவி நீக்கம்

தன்னுடைய தனிப்பட்ட ஆதாயத்திற்காக செயல்பட்ட சோய் சூன்-சில்லுக்கு பார்க் குன் ஹெ ஆதரவு அளித்திருப்பதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

சோய் சூன்-சில்

பட மூலாதாரம், Chung Sung-Jun/Getty Images

படக்குறிப்பு, மாவட்ட நீதிமன்றத்தில் சோய் சூன்-சில்

அரசியல் சாசன நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின்படி விசாரிக்கப்படுவதற்கான விதிவிலக்கு உரிமையை இழக்கும் பார்க் குன் ஹெ, குற்றவியல் விசாரணை நடைமுறைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

இதனால், இன்னும் 60 நாட்களுக்குள் தென் கொரியாவில் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அதிபரை தோழியான சோய் சூன்-சில் ஆட்டுவிப்பது போன்று போராட்டகாரர்கள் வடிவமைப்பு

பட மூலாதாரம், JUNG YEON-JE/AFP/Getty Images

படக்குறிப்பு, அதிபரை தோழியான சோய் சூன்-சில் ஆட்டுவிப்பது போன்று வடிவமைத்த போராட்டகாரர்கள்

தென் கொரியாவின் முதலாவது பெண் அதிபராக புகழ்பெற்ற பார்க் குன் ஹெ, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்தில் இருந்து நீக்கப்படும் முதலாவது தலைவராகவும் மாறியுள்ளார்.

இவரை அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை நாட்டை பிளவுப்படுத்தியுள்ளதாக சோலில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.

மேலதிக தகவல்களுக்கு:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்